Posts

ஞானி பாகம் 5 - 3 தானம்

3. தானம் தேர்தல் முடிந்திருந்தது. தவறாமல் நானும் என் மனைவியும் வாக்களித்து வந்தோம். என்னால் முடிந்தவரை என் சோம்பேறி நண்பர்களைத் தொலைப்பேசியில் அழைத்து அவர்களையும் வாக்கிட வைத்திருந்தேன். ஒரு பெரிய மகிழ்ச்சி. சோனியை சந்தித்தேன். "சந்தோஷம்" என்றான். ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை அவன் ஏற்படுத்தியதை அறியாமல். அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. "சரி சோனி, உன்கிட்டேயும் ஞானி மாதிரி பல விஷயங்கள் கத்துக்க வேண்டியதிருக்கு. ஆனா எனக்கு என்ன கேட்கனும்னு தெரியலை. எனக்குத் தோனும்போது கேட்கறேன், சரியா" என்று சொன்னேன். "சரி, சரி" என்றான். அவனுக்குப் பிச்சையிடும் வழக்கமானவர்களை மறைப்பதாக நினைத்தான் போலும். "சோனி, பிச்சைக்காரங்களை நாங்க தான் உருவாக்கறோம்னு தெரிஞ்சிகிட்டேன். அவங்களுக்கு எப்படி உதவி பண்றது. பொது நல சேவை நிறுவனங்களை நம்ப முடியறது இல்லை. நான்-ஃபிராஃபிட் அப்படின்னு சொல்லிகிட்டு வெளிநாட்டிலேர்ந்து நன்கொடை வசூலிக்கிறாங்க. அது நிஜமாவே தேவையானவங்களுக்குப் போய்ச் சேருதான்னா இல்லை தான். என்ன பண்றது" என்று பணிவாக வினவினேன். "கடைக்கு போற இல்லை

ஞானி பாகம் 5 - 2 வாக்கு

2. வாக்கு வழக்கம் போலக் கோவில் வாசலில் சோனி. இரண்டு ரூபாய் எடுத்துப் போட்டேன். "விலைவாசி ஏறிடுச்சு இன்னும் இரண்டு ரூபாயே போடறே". "அது சரி விலைவாசி ஏற நானா காரணம். அதை அரசாங்கத்திடம் கேட்கனும்" என்று சிரித்துக் கொண்டே பையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்தேன். "அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கற பொறுப்பு மக்கள் கிட்டே தானே இருக்கு" என்றான். "அட, நாம எங்க தேர்ந்தெடுக்கறோம். அவங்களா ஜெயிச்சு வந்திடறாங்க". "அதெப்படி நீ ஓட்டு போடறதில்லையா". "இல்லப்பா. நான் ஓட்டு போட்டா மாத்திரம் நிலைமை மாறப் போவுதா". "ஏன் மாறாது". "அப்ப நீ ஓட்டு போடறியா". "ஆமாம்". "அட" என்று என் ஆச்சர்யம் நீடிக்கும் முன் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை என்று எடுத்து நீட்டினான். "அடே இதெல்லாம் வைச்சிருக்கியா எப்படிக் கிடைச்சுது". "கோவில் அட்ரெஸ் தான்" என்றான். "யாருக்கு ஓட்டுப் போட்டே" என்ற வெகுளியாகக் கேட்டேன். சட்டென்று முறைத்தான். "அது சரி நீ ஏன் ஓட்டுப் போடலே&qu

ஞானி பாகம் 5 - 1 தினசரி

1. தினசரி சமீபத்தில் ஒரு மேற்கத்திய உணவகத்தில் ஏழை சிறுவனை உள்ளே விடவில்லை என்ற செய்தி கேட்டுக் கொதித்துப் போனேன். நானும் அதை முயன்றால் என்ன என்று நினைத்து சோனியை ஒரு நாள் அழைத்துப் போனேன்.  ஊடகங்களில் கூக்குரல்களை அசட்டை செய்துவிட்டு அந்த உணவகத்தின் பணியாள் என்னுடன் வந்த சோனியை தடுத்து நிறுத்தினான்.  நான் ஏன் என்று கேட்டேன்.  அவர் சுகாதாரமாக இல்லை. சரியான உடை உடுத்தவில்லை. அதனால் உள்ளே விடமுடியாது என்று அவன் விளக்கமளித்தான்.  நான் அவ்வாறு விளக்கி எந்தப் பலகையும் உணவகத்தின் முன் வைக்கவில்லையே என்று விவாதித்தேன்.  சோனி சாவகாசமாக என் கையில் இருந்த செல்பேசியை என்னிடமிருந்து கேட்டு வாங்கினான். பிறகு யாருக்கோ தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். இரண்டு நிமிடம் பேசிவிட்டு அந்த உணவகத்தின் பணியாளைப் பார்த்து அந்தப் பெரிய நாளிதழின் பேரை சொல்லி அதன் நிருபர் அவனிடம் பேச விரும்புவதாகக் கூறினான்.  அதைக் கேட்டது அவன் நடுங்கிப் போய், "உள்ளே போங்க, உள்ளே போங்க" என்று பதறிப்போய் வழிவிட்டான். நான் ஆச்சர்யப்பட்டேன்.  "என்ன சோனி, அப்படி யாருக்கு போன் போட்டே நீ" என்று ஆர்வ

தமிழில் பங்குச் சந்தை மேலும் புதிய பகுதிகள்

தமிழில் பங்குச் சந்தை மேலும் 4 புதிய பகுதிகளை இப்போது யூடியூப் தளத்தில் காணலாம். Http://www.youtube.com/leomohan

பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 7

Image
பங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி  7

5-நிமிட காணொளி தொடர்

Image
5-நிமிடங்களில் ஏதாவது பயனுள்ள ஒரு செய்தியை பகிர்ந்துக் கொள்ள முடியுமா? ஒரு புதிய முயற்சி. - முன்னுரை மேலும் இந்த தொடரில் வரவிருக்கும் தலைப்புகள் 1. Edraw Mind Map பயன்படுத்துவது எப்படி 2. Microsoft One Note ன் பயன்பாடு 3. iPhone/iPadல் தமிழ் விசைப்பலகை 4. தமிழில் யூனிகோட் தட்டெழுத்து 5. உங்கள் படைப்புகளை Google Booksல் வெளியிடுவது எப்படி 6. உங்கள் படைப்புகளை Apple iBooks Storeல் வெளியிடுவது எப்படி 7. தமிழில் ஒலி Podcasting செய்வது எப்படி 8. இன்னும் பல....

5 நிமிடங்கள்

வணக்கம் தனியார்துறை பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிப்பதைப் பற்றி ஒரு காணொளி தொடுர் யூடியூபில் துவக்கினேன். அதற்கு நல்ல ஆதரவும் ஊக்கமும் கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு பகுதியும் 30 நிமிடங்கள் நீளமாக இருக்கிறது. நேரத்தை குறைத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் எனும் கருத்து வந்தது. அதனால் என்னுடைய அடுத்த காணொளி தொடரான பங்குவர்த்தகம் பற்றிய தொடரை 15 நிமிடங்களாக குறைத்தேன். ஆனால் அதற்கும் நேரமில்லை மக்களுக்கு. 5 நிமிடத்தில் ஏதாவது பயனுள்ளதாக சொல்ல முடியுமா என்று கேட்டார்கள். அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த போது சரி முயன்று பார்த்துவிடலாம் என்று செய்த முயற்சியே 5-நிமிடங்கள் காணொளி தொடர். இதில் 5 நிமிடத்திற்குள் நான் கற்ற சில விடயங்களை பற்றி பகிர்கிறேன். தொடர்ந்து உங்கள் ஆதரவை நல்கும், மோகன் காணொளி தொடரின் சந்தாதாரராக ஆவதற்கு http://www.youtube.com/leomohan எனும் முகவரிக்கு செல்லுங்ள்.