Posts

Showing posts from July 28, 2013

மலரும் நினைவுகள்:கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு

கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு கனவுகள் வராத தூக்கம் எனக்கு என்று சொல்லி சந்தோஷப்படுபவன் நான். மன்றத்திலும் பல முறை சொல்லியிருக்கிறேன். இவ்வாறு இருக்க கடுமையான பணி சுமையினாலும் சில மாற்றம் கண்டுள்ள உணவு, உறக்கம் பழக்கத்தினாலும் இன்று அதிகாலையில் ஒரு கனவு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு IT Open Minds 2007 எனும் Computer Seminar நடந்தது. அதற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன். அதில் திறவுமூல மென்பொருட்களை பற்றி பேசிய பேச்சாளர், சபையை பார்த்து Linux ல் பரிட்சயம் உள்ளவர்கள் மேடைக்கு வந்து பேசலாம் என்றார். நான் மேலே சென்று ஒரு பத்து நிமிடம் பேசினேன். பரிசாக ஒரு T-shirt ம் ஒரு புத்தகமும் கொடுத்தார்கள். பள்ளிப்பருவத்தில் மேடை பேச்சு அனுபவங்களை புதுமைபடுத்திச் சென்றது இந்த நிகழ்ச்சி. பள்ளியில் வருடா வருடம் கலை கழக போட்டி நடக்கும். கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர் ஏதாவது ஒரு பள்ளியில் கூடுவார்கள். பேச்சு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், இசை, வில்லுபாட்டு போன்ற பல போட்டிகள் நடக்கும். சுமார் 64 பள்ளிகள் பங்கு பெறும். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ந

தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 1

இன்னும் பெயர் வைக்கவில்லை புதிய தொடர்கதை எழுத்து மோகன் கிருட்டிணமூர்த்தி 1 சென்னையின் மிகவும் பிரபலமான அதே நேரத்தில் ஒரு மணிக்கு பல ஆயிரம் கறக்கும் மனோதத்துவ மருத்துவரின் முன் அமர்ந்திருந்தேன். ஒரு சிறிய இருட்டறை. தூரத்தில் சிறிய விளக்கு. நன்றாக சாய்ந்து அமர ஒரு தோல் இருக்கை அருகில் சிறிய குவளையில் குடிநீர். எதிரே ஒரு சிறிய முக்காலியில் மருத்துவர். பல நிமிடம் அமைதியாக இருந்தோம். அந்த அமைதி எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. யுகமாகியிருக்கும் போல் தோன்றியது. காத்திருந்தேன். காத்திருக்க செய்திருந்தார் அவர். வயது அறுபது இருக்கும். என்னைப்போல பல பேரை பாத்திருப்பாரா அல்லது உலகிலேயே நான் ஒருவன் தான் இதுபோலா. பல பேர் இவரிடம் ஆலோசிக்க சொல்லியிருந்ததால் கடைசி முயற்சியாக இவரிடம் வந்திருக்கிறேன். சொல்லுங்க என்றார் நேரிடையாக. மணிக்கு காசு வாங்குவதால் நேரம் ஆக ஆக நான் கொடுக்க வேண்டிய பணமும் அதிகமாகிவிடும் என்ற பயத்தில் இருந்தேன். படபடவென்று பேசினேன். என்னுடைய பிரச்சனைகளை சில நிமிடத்தில் சொல்லி முடித்தேன். அவர் ஒப்பவில்லை. மீண்டும் அமைதியாக இருந்தார். என்னையும் பேசவிட

மலரும் நினைவுகள்: கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு

கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு கனவுகள் வராத தூக்கம் எனக்கு என்று சொல்லி சந்தோஷப்படுபவன் நான். மன்றத்திலும் பல முறை சொல்லியிருக்கிறேன். இவ்வாறு இருக்க கடுமையான பணி சுமையினாலும் சில மாற்றம் கண்டுள்ள உணவு, உறக்கம் பழக்கத்தினாலும் இன்று அதிகாலையில் ஒரு கனவு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு IT Open Minds 2007 எனும் Computer Seminar நடந்தது. அதற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன். அதில் திறவுமூல மென்பொருட்களை பற்றி பேசிய பேச்சாளர், சபையை பார்த்து Linux ல் பரிட்சயம் உள்ளவர்கள் மேடைக்கு வந்து பேசலாம் என்றார். நான் மேலே சென்று ஒரு பத்து நிமிடம் பேசினேன். பரிசாக ஒரு T-shirt ம் ஒரு புத்தகமும் கொடுத்தார்கள். பள்ளிப்பருவத்தில் மேடை பேச்சு அனுபவங்களை புதுமைபடுத்திச் சென்றது இந்த நிகழ்ச்சி. பள்ளியில் வருடா வருடம் கலை கழக போட்டி நடக்கும். கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர் ஏதாவது ஒரு பள்ளியில் கூடுவார்கள். பேச்சு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், இசை, வில்லுபாட்டு போன்ற பல போட்டிகள் நடக்கும். சுமார் 64 பள்ளிகள் பங்கு பெறும். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடக்கும்.

மலரும் நினைவுகள்: பஹ்ரைனில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட்

பஹ்ரைனில் ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் சூரியனுக்கும் எனக்கும் ஆகாதென்று பலருக்கு தெரிந்திருக்கும். இரவு வெகுநேரம் கணினியில் நோண்டிவிட்டும், புத்தகங்களில் புகுந்துவிட்டும், டிவியில் இனி நிகழ்ச்சிகளே இல்லை என்று அறிவிப்பாளர்களே திட்டிய பிறகும் தான் படுக்க செல்வது வழக்கம். I'm Not a Morning Person, To Get-up At 5.00 There is No Reason என்று கவிதையே புனைந்ததும் உண்டு. அலுவலகத்திலேயே தண்ணீர் தெளித்துவிட்டாயிற்று. நீ வேலையை செஞ்சா போதும் எனும் அளவிற்கு. Access Control Proximity Card என்றாவது நான் 8 மணிக்கு வந்ததாக வருகை பதிவாகியிருக்கிறதா என்று கேட்டால் கண்ணீர் மல்கும். இவ்வாறான பின்னனியில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வரும் நான் நேற்று பிற்பகுதி கிரிகெட் மேட்ச் பார்க்காமல் வாழ்வில் ஒரு பெரிய பாவத்தை செய்ய இருந்தேன். அதனால் இரவு ஹைலெட்ஸ் பார்த்து கங்கா ஸ்நானம் செய்துக் கொள்ளலாம் என்று நினைத்து நியோஸ்பார்ஸ்ட தொலைகாட்சியை தட்டினால் அவர்களோ பந்து பந்தாக முழு ஆட்டத்தையும் காட்டிக் கொண்டிருந்தார்கள். சரி சில விக்கெட்டுகள் விழும் வரையில் பார்க்கலாம் என்று நினைத்துக் கொண்டே சோபாவில் உறங்க

மலரும் நினைவுகள்:தண்ணீர் பால் நினைவுபடுத்திய சம்பவம்...........

தண்ணீர் பால் நினைவுபடுத்திய சம்பவம்........... Full Cream பால் வாங்குவது தான் வழக்கம். அதாவது வாங்கினால். இல்லையென்றால் Powder பால் தான். காரணம் bachelor lifeல் அவர்கள் சொல்லும் expiry dateக்குள் முழு litreஐயும் குடிப்பது சாத்தியம் அல்லவே. Full Cream பால் கொழுப்பு தான் என்று சொல்வது காதில் விழுகிறது. காரணம் சுவைக்காக மட்டுமல்ல. மீண்டும் அதில் தண்ணீர் தான் கலக்கப்போகிறேன். இருந்தாலும் தண்ணீர் பாலில் அதாவது skimmed milkல் சுவையே இல்லை. வெறும் சுடுநீரில் காபி கலந்தது போல் இருக்கும். இன்றும் மாலை அலுவலகம் விட்டு வந்தவுடன் பாலை தண்ணீரில் கலந்து சுடவைத்து ஒரு காபி கலந்தேன். சே, நிறைய தண்ணீர் கலந்துவிட்டேன் போலிருக்கிறது. இதுபோல தண்ணீர் காபி நான் டிரெயினிலும் குடித்ததில்லை. கடைசியாக எப்போது இதுபோல தண்ணீர் காபி குடித்தேன் என்று யோசித்தபோது இந்த சம்பவம் என்னை பல ஆண்டுகளுக்கு பின்னால் கொண்டு சென்றது. அப்போது நான் 11வது வகுப்பில் இருந்தேன். நாகப்பட்டினத்தில் படித்து வந்தேன். எல்லா இளைஞர்களை போல தேசப்பற்று, புரட்சி, ஏழ்மையை கண்டால் எழுச்சி, நாட்டிற்கு நல்லது செய்யும் எண்ணம், அடிமட்டத்து மக்கள

சிறுகதை: பாகிஸ்தானிய கூடாரத்தில் ஓர் இரவு

பாகிஸ்தானிய கூடாரத்தில் ஓர் இரவு பாகிஸ்தான் கூடாரத்தில் ஒரு நாள் வெற்றி கரமாக புகுந்தேன். நம்மூரிலேயே நீ துரை மாதிரி இருக்கேடா என்பார்கள் என் கூட்டாளிகள். அத்தனை சிவப்பு நான். வடக்கத்தியர்கள் மற்ற நம்மூர்கார்ரகளை காலியா என்று கிண்டல் செய்தபோதும் என்னை பார்த்தே அவர்கள் பொறாமை படும் அளவிற்கு அந்த அளவுக்கு நிறம் எனக்கு. நான் இந்திய ராணுவத்தில் சேர்ந்த ஒரிரு ஆண்டுகளுக்குள்ளே இவன் உளவு துறைக்கு லாயக்கு என்று என்னை அங்கேமாற்றிவிட்டார்கள். எங்க ஊர் நாடகத்திலே நான் பல விதமான தமிழில் பேச அசத்துவேன். வேறு மொழிகள் கற்பதில் கடினமே இல்லை எனக்கு. ஹிந்தி பஞ்சாபி மலையாளாம் எல்லாம் சுலபமாக கற்றுக் கொண்டேன். அம்மா போய் சேர்ந்த பிறகு சொல்லிக் கொள்ளும் படி உறவு ஒன்றும் இல்லை. அதனால் தான் பாகிஸ்தான் போகவேண்டும் என்று சொன்னதும் ஏற்றுக் கொண்டேன். அதற்கு பிரத்யேக பயிற்சி வேறு கொடுத்தார்கள். மெதுவாக எல்லை கடந்து உள்ளே புகுந்ததும் அந்த ஊர் ரூபாய் காட்டி ஒரு லாரியில் இன்னும் சற்று தூரம் ஊடுருவினேன். அவர்கள் கலாச்சார உடையான சல்வார் கம்மீஸ் அணிந்திருந்தேன். அந்த வண்டி வேறு பக்கம் புகுந்து

சிறுகதை: வறண்ட இதயங்கள்

என்னுடைய முந்தைய நிறுவனத்தின் முதலாளியை பார்த்த போது எனக்கு அழுகை வந்துவிட்டது. என்ன மாதிரி இருந்த மனிதர் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று தோன்றியது. வழக்கமான சம்பாஷணைகளை தவிர்த்து ஏன் சார்? என்னாச்சு என்று கேட்டே விட்டேன். அட ராஜாவா. வாப்பா. நல்லாயிருக்கியா? எங்கே வேலை செய்யறே என்று அன்பாக கேட்டார். அவருடைய பழைய டாட்டா சீயேராவில் இருந்து இறங்கியவாறே. நான் நல்லா இருக்கேன் சார். இப்போ ஒரு பெரிய கம்பெனியில் பொது மேலாளராக இருக்கேன். நீங்க ஏன் இப்படி ஆயிட்டீங்க சார் என்று கேட்டேன். நான் எடுத்த முடிவெல்லாம் ஒரு காலத்துல சரியா போய்கிட்டு இருந்தது இல்லையா. இப்ப சமீப காலத்திலே எடுத்து ஒன்னு ரெண்டு முடிவு கொஞ்சம் நஷ்டத்தை ஏற்படுத்திடுத்து என்று விவரித்தார். நம்பிக்கையானவர்கள் அவரை ஏமாற்றிய கதை. பேசிக் கொண்டே நடந்த போது தேனீர் கடையின் அருகில் இருந்த ஒரு சிறிய வீட்டிலிருந்து அழுகை குரல் வந்தது. ஒரு பெண்மணி ஓடி வந்து என் கொழந்தைய காப்பாதுங்களேன் என்று அழுதவாறு எங்களை பார்த்து கதறினாள். நான் ஆமா சென்னையில் வழிபோக்கர்களை ஏமாற்ற புது புது வழிகளை கண்டுபிடித்தவாறே இருக்கிறார்கள் என்று நினைத்து சலித்துக் க

சிறுகதை: உறைந்த உறவுகள்

வியாழன் இரவு. துபாய். ராசுவுக்கு 9 மணிக்கே தூக்கம் வந்தது. வழக்கமாக வியாழன் இரவு கூத்து தான். பிறகு வெள்ளி விடுமுறை என்பதால் பாதி நாட்கள் தூக்கம். இரண்டு வருடத்திற்கு ஒரு முறை விடுமுறை மற்றும் இலவச விமான பயணம் தாயகம் செல்வதற்கு. வந்து 5 வருடங்கள் ஆகிவிட்டன. முதல் விடுமுறைக்கு சென்றதோடு சரி. மூன்று வருடங்கள் ஆகியும் போகவில்லை. சென்ற முறை விடுமுறைக்கு தந்தையை விசிட் விசாவில் அழைத்து வந்திருந்தான் இரண்டு வாரங்களுக்கு. இந்த முறை வந்தால் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவன் தந்தை நிச்சயமாக இருந்தார். உன் கல்யாணத்தை பாத்துட்டா நிம்மதியா சாவேன் என்பார் அவனுடயை 60 வயது தந்தை. அப்பா, நீ சாகப்போறின்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்பான் இருபதெட்டு வயது குழந்தை. அவனுக்கு தந்தை என்றால் உயிர். இன்று அவருடைய நினைவு அதிகம் வாட்டியது. அழைப்பு மணி அடித்து. கதவை திறந்தவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. அவன் தந்தை உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தார். என்னப்பா திடீர்னு, தனியாவா வந்தே ஆமான்டா உன்னை பாக்கனும்போல இருந்தது என்றார் அவரை அப்படியே கட்டி தழுவினான். அவரும் அவனை உச்சி மோர்ந்தார். என்னப

கட்டுரை: புத்தகம் படிக்கும் முறை-2

கதை புதினங்கள் படிக்கும் போது... 1. ஆங்கில புத்தகம் - பல வேளையில் அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிவதில்லை. அதனால், கதையை நடுவில் நிறுத்தி அகராதியில் பொருள் தேடமாட்டேன். இதனால் கதையின் சுவாரஸ்யம் கெட்டுவிடும். அதனால் Pencil அல்லது Highlighter மூலம் குறித்துக் கொள்வேன். பிறகு கதையை முடித்த பிறகே அதன் பொருள் தேடுவேன். 2. ஆங்கிலம்-தமிழ் புத்தகங்கள் - பல வருடங்களுக்கு முன் விரைவாக படிப்பது எப்படி எனும் ஒரு புத்தகம் படித்தேன். அதை பயிற்சி செய்தேன். முழு வெற்றி அடைந்தேனா என்று தெரியாது. ஏனென்றால் விரைவாக படிப்பது எப்படி, விரைவாக புரிந்துக் கொண்டு படிப்பது எப்படி என்பது இரு வேறு முறைகள்.  மனிதனின் பார்வை மிகவும் அகலமானது. அதனால் நாம் புதினத்தின் நடுவில் நம் கண்களை பதித்துக் கொண்டு, இடது வலதாக கண்ணையோ தலையையோ அசைக்காமல், நடுவிலிருந்து படிக்க முயலவேண்டும். இதனால் நாம் வார்த்தைகளாக படிப்பதை விட்டு வரிகளாக படிக்க முயலுவோம். இரண்டாவது நுட்பம் ஆரம்பத்தில் விரலை வைத்துக் கொண்டு பயிற்சி செய்வது. இதில் என்ன நுட்பம். இது பழைய முறை தானே என்று நீங்கள் கேட்கலாம். இதில் என்ன வித்தியாசம் என்றா

கட்டுரை: புத்தகம் படிக்கும் முறை-1

புத்தகம் படிக்கும் முறை நான் என் முறையை எழுதுகிறேன். நான் பின்பற்றும் முறை தொழில் நுட்ப புத்தகமானால் மூன்று நிற Highlighters எடுத்துக் கொள்வேன். 1. மஞ்சள் - Definition, உதாரணமாக Protocol என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய விவரத்தை நாம் வெவ்வேறு மாதிரியாக கொள்ள முடியாது அல்லவா. ஆக எங்கெல்லாம் இது போன்றவற்றை காண்கிறேனோ அந்த வரிகளை மஞ்சள் கொண்டு குறித்துவிடுவேன். 2. பச்சை - Statistics, புள்ளிவிவரங்கள். அதாவது CAT 5 UTP Cable 100 metre தான் வேலை செய்யும் என்றால், இதையும் நம் இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. ஆக 1, 2 இரண்டையும் மனப்பாடம் செய்ய வேண்டும். 3. மென்சிவப்பு - Examples, உதாரணங்கள். இதை படித்தால் மற்ற இரண்டும் நினைவுக்கு வரவேண்டும். இதை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. ஆனால் சுவாரஸ்ய உதாரணங்களுடன் நினைவு கொள்ள வேண்டும். முதல் முறை 250 பக்கம் புத்தகம் படிக்க 8 மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் முதலிருந்து கடைசிவரை அனைத்து பக்கங்களும் அடங்கும். Appendix, Glossary, Printed & Published by உட்பட. இரண்டாவது முறை வெறும் மஞ்சள், பச்சை, மென்சிவப்பு செய்த வரிகளை மட்டும் பட

கட்டுரை - உங்களை அளக்க GYRO அளவு கோல்

Image
உங்களை அளக்க GYRO அளவு கோ ல் GYRO அளவு கோல் திசைகளை அளக்க உபயோகப்படுகிறது. அதைத் தவிர இந்த கட்டுரைக்கு அதனுடன் வேறு சம்பந்தம் இல்லை. நான் கைரோ என்று குறி்ப்பிடுவது G-க்ரீன், Y-யெல்லோ, R-ரெட், O-ஆரஞ்ச். இவை என்ன என்று பார்ப்போம். ஒரு வரைப்படத்தில் இரு பாகங்கள் இருக்கின்றன. இடமிருந்து வலமாக இருக்கும் கோடு ஊழியரை குறிக்கிறது. நடுவிலிருந்து இடமாக இருப்பது பாதமான நிலை, நடுவிருந்து வலமாக இருப்பது சாதகமான நிலை. மேலிருந்து கீழாக இருக்கும் கோடு நிர்வாகத்தை குறிக்கிறது. நடுவிலிருந்து மேல்புறம் சாதகம் என்றும் நடுவிலிருந்து கீழ் புறும் பாதகம் என்றும் கொள்வோம். Y (M-Management) அச்சு ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தை குறிப்பதாக வைத்துக் கொள்வோம். X (E-Employee) அச்சு அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்று வைத்துக் கொள்வோம். + - Positive சாதகமான நிலை - Negative - பாதகமான நிலை இந்த வரைப்படத்தை வைத்துத்தான் இந்த GYRO கூற்று. பச்சை பெட்டி நிர்வாகம் - சாதகமான நிலை. ஊழியர் - சாதகமான நிலை. இந்நிலையில் நிர்வாகம் ஒரு ஊழியருக்கு சரியான சம்பளம், பயிற்சி, வாய்ப்பு, அ