ஞானி பாகம் 3 - 4. வெளிநாட்டில் வேலை

ஞானி பாகம் 3 - 4. வெளிநாட்டில் வேலை

எனக்கும் என் மனைவிக்கு பெரிய வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனக்கு வெளிநாட்டில் ஒரு வேலை வாய்ப்பு கிடைத்திருந்தது. நான் போகலாம் என்று சொல்ல அவள் போக வேண்டாம் என்று சொல்ல ஒரு வாக்குவாதம் நடந்துக் கொண்டிருந்தது.

உங்களுக்கு தேசப்பற்றே இல்லையா - என் மனைவி.

அப்ப வெளிநாட்டுல இருக்கற நம்ம ஊர்காரங்களுக்கு எல்லாம் 
தேசப்பற்று இல்லையா? - நான்

நான் சொந்த பந்தத்தையெல்லாம் விட்டுட்டு வரமாட்டேன்.

இப்ப மட்டும் தின போய் உட்கார்ந்துக்குறோமா யார் வீட்டிலையாவது?

நம்ம ஊர்ல படிச்சா தான் பிள்ளைங்க நம்ம கலாச்சாரத்தை கத்துப்பாங்க.

என்ன வாழுது இங்கே கலாச்சாராம். அங்க போனா நல்ல படிப்பு கிடைக்கும் பிள்ளைகளுக்கு.

அப்ப இங்கே படிச்சிட்டு ஃபாரீன் போலையா மத்தவங்களெல்லாம்.

நல்ல லைஃப் ஸ்டைல் கிடைக்கும் - நான்.

எனக்கு அந்த லைஃப் ஸ்டைலெல்லாம் வேண்டாம் - அவள்.

இப்படியாக போய் கொண்டிருந்தது. ஞானி உள்ளே நுழைந்தான்.

குடும்ப வக்கீல் குடும்ப டாக்டர் போல எங்களுடைய குடும்ப ஆலோசகர் ஞானி.

நாங்கள் சொன்னதை கேட்டதும் ஒரு காகிதத்தில் எதையோ எழுதினான்.

என்னை பார்த்து கேட்டான் - பணக்காரன் ஆவதற்காக வெளிநாட்டிற்கு போகிறாயா? நம் நாட்டில் இருந்தே பலர் பணக்காரர் ஆகியிருக்கிறார்கள். எப்படி என்று பார். வெளிநாட்டில் வேலை செய்கிறேன் எனும் பெருமைக்காக போகிறாயா? நீ பெருமை படுவதை பார்த்து சந்தோஷம் படும் அளவிற்கு உன் சுற்றம் பக்குவம் அடைந்துவிட்டதா என்று பார்? 

இதை சொல்லிவிட்டு எழுந்தான் ஞானி. அவன் சொன்னது நன்றாக புரிந்தது. ஆனாலும் இன்னும் அந்த முத்திரை வசன முன்னுசாமி வரவில்லையே என்று பார்த்தேன். பொட்டில் அடித்தது போல் எதையாவது சொல்வானே என்று காத்திருந்தேன்.

அவன் கிறுக்கிய காகிதத்தை தந்துவிட்டு விலகினான்.

நீ இருக்கும் இடமும் இருக்க விரும்பம் இடமும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் இரண்டிலும் மாறாமல் இருப்பது நீ மட்டும் தான் - என்று எழுதியிருந்தது.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி