தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-21-நிறைவுப் பகுதி
21 பிரில்லியண்ட் என்றார் ரதீஸன். அது சரி இந்த ஸ்கிரிஃப்டை அரசியல்வாதி எப்படி அனுமதிச்சாரு. அவருக்கு சந்தேகம் வரலையா என்று கேட்டாள் கயல்விழி அதுவரையில் மௌனமாக கொண்டாடிக்கொண்டு இருந்தவள். மோகன் உடனே, வந்தது. அவன் ஏன் கொலை செஞ்சது நான் தான் ஒத்துகலைன்னு கேட்டாரு. நான் சொன்னேன் சார் முதல்லே கொலையை ஒப்புகிட்டா கோர்டுக்கு சந்தேகம் வராதான்னு சொல்லி சமாளிச்சேன். அப்புறம்.. ஒரே சாதிக்காரங்கன்னு நீங்க எழுதின வரில அவங்களுக்கு சந்தேகம் வரலையா. ஹாஹா. அது தான் நாம் செஞ்ச அதிர்ஷ்டம். ஆனா அடுத்த வரியை பிடிச்சிட்டாங்க. ஏன் “ அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாரு ” இந்த வரி தேவையான்னு கேட்டாரு. அதுக்கு நான், சார் அவன் மனநிலையில்லை சரியில்லைன்னு இங்கே எஸ்டாப்ளீஷ் பண்ணாதான் பின்னாடி அவரை விடுவிக்கலாம் அப்படின்னு சொல்லி சமாளிச்சேன். மத்தக் கதை... மத்தக் கதை எங்கே. இந்த இடத்துல கதிரவன் குணமாயிட்டாரு. மத்த கதையை எழுதினது அவருடைய ஞாபக சக்தியு...