தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-17
17
நீதிபதி வந்து அமர்ந்தவுடன் அரசாங்க தரப்பு
வக்கீலை பார்த்து நீங்க அவரை மனநிலை சரியில்லாதவர் அப்படின்னு சொன்னீங்க போன
ஸிட்டிங்கல. அங்கேர்ந்து கண்டின்யூ பண்ணுங்க என்றார்.
அரசாங்க தரப்பு வக்கீல் தொடர்ந்து பேசினார்.
கதிர் நீங்க நல்ல மன நிலையில் தான்
இருக்கீங்கன்னு நீங்களும் இந்த நீதி மன்றமும் ஒப்புக்கிட்டா நீங்க பண்ண கொலைக்கு
அதிக பட்ச தண்டனை கிடைக்கும். இல்லையா
ஆமாம்.
எனக்கு வேலை சுலபமாயிடும். இத்தோட என் வாதத்தையும்
நான் முடிச்சிக்கலாம். ஆனா நீங்க மன நிலை திடமில்லாதவர்னு எனக்கு தெரியும்.
உங்களுக்கு உதவி செய்யத் தான் நான் இருக்கேன். ஒன்றும் அறியாமல் நீங்க செய்த
கொலைக்கு உங்களுக்கு தண்டனை வாங்கித் தரதுல எனக்கு விருப்பம் இல்லை. அதனால நான்
கேட்கற கேள்விகளுக்கு நீங்க சரியா பதில் சொல்லுங்க. அதுக்கப்புறமும் நீங்க உங்க
நிலையில் திடமா இருந்தீங்கன்னா நாமை வழக்கை முடிச்சிடலாம். சரியா
சரி சார். கேளுங்க.
உங்க பெயர் நிஜமாகவே கதிரா அல்லது நீங்க
சமீபத்துல படிச்ச கதையில் வந்த கதாபாத்திரமா.
நீங்க என்ன கேள்வி கேட்கறீங்க என்று நீதிபதி
கேட்டார்.
லார்ட்ஷிப் குற்றம் சாட்டப்பட்டுள்ள கதிர்
மனநிலை சரியில்லாதவர். அவர் சமீபத்தில் இந்த நான்கு வைத்தியர்களிடம் தன்
பிரச்சனைக்காக வைத்தியம் பார்த்துள்ளார். இவர் தான் படிக்கும் கதைகளில் வரும்
கதாபாத்திரமாகவே மாறிவிடுவதால் பல தவறுகள் அவர் அறியாமலேயே நடந்துள்ளன. அதனால்
இவருடைய மன நிலையை கருதி இவரை விடுதலை செய்து இவருக்கு முறையான மருத்துவம் கிடைக்க
வழி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவரு சென்று வந்த மருத்துவமனைகளும்
அவர் உட்கொண்ட மருந்து விபரங்களும் இதோ.
இப்படி கொலை செய்யறவங்க எல்லாருமே மனநிலை
சரியில்லாதவங்கன்னு வாதாடினா கோர்ட் எதுக்கு நீதி மன்றம் எதுக்கு என்று கேட்டார்
நீதிபதி காட்டமாக. வேறு ஏதாவது ஆதாரம் இருக்கா?
இவர் சமீபத்தில் சென்று வந்த மனோதத்துவ நிபுணர்
ரதீஸனை சாட்சியாக அழைக்கிறேன் என்றார் அ.சா.த வழக்கறிஞர்.
டாக்டர் ரதீஸன்.
ஆமாம்.
இவருடைய நிலைமையை விளக்க முடியுமா.
முடியும் சார் என்று சொல்லி குறைந்த
வார்த்தைகளில் கதிரின் நிலையை விளக்கினார்.
அதுக்கு ஆதாரம் இருக்கா.
இருக்கு சார். அவரு வக்கீலா நினைச்சு போலீஸ்ல
போனது. அந்த விபரங்கள் இதோ. அவரு என் கிட்ட வந்த செஸஷன்ஸ் விபரம். ஆடியோ பதிவுகள்
என்று அனைத்து விபரங்களை தந்தார்.
நன்றி டாக்டர்.
லார்ட்ஷிப் உங்கள் பார்வைக்கு என்று அனைத்து விபரங்களையும் நீதிபதியிடம்
சேர்த்தார். அவர பொறுமையாக எல்லாவற்றையும் சோதித்துவிட்டு, சரி தீர்ப்பு வர
திங்கட்கிழமை என்று ஒத்திவைத்தார்.
குற்றவாளி கொலை செய்தது காவல்துறை சரியான
ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. கதிரவனுக்காக வாதாட வழக்கறிஞர்கள் இல்லாவிட்டாலும்
அரசாங்க தரப்பே சிரத்தையாக அவரை பற்றி விபரங்களை சேகரித்ததற்கு எனது
பாராட்டுக்கள். கொலையாளி மாட்டிவிட்டான் என்று வழக்கை மூடித்தள்ளாமல் மனித
நேயத்துடன் இதை அணுகியிருக்கிறார்கள். கதிரவன் தான் படிக்கும் கதாபாத்திரமாக
மாறிவிடுகிறான் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகிறது. ஆகையால்
அவருக்கு தக்க சிகிச்சை அளிக்க உத்தரவு இடுகிறேன். ஆனால் இதுபோன்ற ஆபத்தான
வியாதியுள்ளவரை சுகந்திரமாக நடமாடவிட்டதற்காக அவருடைய குடும்பத்தினருக்கு ஒரு
லட்சம் அபராதம் விதிக்கிறேன். மேலும் உயிர் இழந்த குடும்பத்தினர் நஷ்டஈடு கேட்டு
வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் இருக்கிறார்கள்
என்பதையும் எச்சரிக்கிறேன். கதிரவனை பாதுகாப்பாக மருத்துவமனையில் சேர்த்து மேலும்
இதுபோன்ற குற்றங்கள் நடக்காமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அளிக்குமாறு
காவல்துறைக்கு உத்தரவு ஈடுகிறேன் என்று தீர்ப்பை படித்து முடித்து
கையெழுத்திட்டார்.
Comments