தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை-15
15
உங்கள் பெயர்.
கதிரவன். கதிர்ன்னு கூப்பிடுவாங்க.
என்ன படிச்சிருக்கீங்க.
எம்எஸ்சி மைக்ரேயாலஜி.
எங்க வேலை பாக்கறீங்க.
இப்போ வேலையில்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன்.
உங்களுக்கு எம்எல்ஏ .......... தெரியுமா?
ஒரு தடவை பாத்திருக்கேன்.
அவரை நீங்க போன மாசம் 20ம் தேதி அரிவாளால
வெட்டினீங்களா
ஆமாம்.
எதுக்காக வெட்டினீங்க.
இந்த மாதிரி அரசியல்வாதியால ஒரு பிரயோசனமும்
இல்லை. சொந்த தொகுதிக்கு கூட ஒரு நல்ல காரியம் செய்யலை. இவங்களையெல்லாம் நடு ரோட்ல
வெட்டனும்.
உங்களுக்கு மனநிலை சரியில்லையா
ஏன் சார் என்னை பாத்தா மனநிலையில்லை சரியில்லாத
மாதிரியா இருக்கு.
நீங்க ஏன் உங்க ஆபீஸ் பொருட்களை போட்டு
உடைச்சீங்க.
சம்பள உயர்வு கேட்டிருந்தேன். கொடுக்கலை. அதனால
கோபிசிகிட்டு உடைச்சிட்டேன்.
உங்க மனநிலை சரியில்லாதற்காக நீங்க ஏதாவது
மருத்துவம் பாத்தீங்களா.
சார் எனக்கு மனநிலை சரியாதான் இருக்கு. நான்
எந்த டாக்டர்கிட்டேயும் போனதில்லை. வேணும் என் குடும்பத்தாரை கேட்டுப் பாருங்க.
என் காதலி கயல்விழியை கேட்டுப்பாருங்க.
சரி. சரி. இந்த கொலைக்கு உங்களுக்கு மரண தண்டனை
கிடைக்கலாம் இல்லையா.
ஆமாம் சார்.
அப்ப குற்றத்தை ஒப்புக்கறீங்களா.
இத்தனை நேரம் அதைத்தானே சார் செஞ்சிகிட்டு
இருக்கேன்.
நீதிபதி நடுவில் குறுக்கிட்டு நீங்க அநாவசியமா
ஏன் நேரத்தை வீண் பண்றீங்க. அவரே குற்றத்தை ஒத்துகிட்டாரு. நீங்க போலீஸ் தரப்பு
விபரங்களை போஸ்ட் மார்டம் கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதம் FIR எல்லாம் விபரமா கொடுங்க. யாரும் கண்டஸ்ட் பண்ணாத
கேஸூக்கு ஏன் நேரத்தை வீணடிக்கிறோம் என்றார்.
இல்லை. அவருக்கு மனநிலை சரியில்லை என்று சொல்லி
அரசாங்க வக்கீல் இழுத்தார்.
என்ன சொல்றீங்க. அவருக்கு மனநிலை சரியில்லைன்னு
சொல்லி எக்ஸம்ஷன் கேட்க போறீங்களா. அவருக்கு மனநிலை சரியில்லைன்னு ஏதாவது எவிடன்ஸ்
இருக்கா? அதை செய்யுங்க. கேஸை தள்ளி வைக்கிறேன்.
Comments