தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 6
6 மோகன் அலுவலகத்திலிருந்து ரதீஸனை பார்க்க விரைந்தான். இவனுக்காகவே அவர் காத்திருந்தது போல இவன் நுழைந்ததுமே அவர் கதை திறந்துக் கொண்டு வரவேற்றார். உள்ள அழைத்துச் சென்ற அவனை அமரச் செய்தார். என்ன சாப்பிடறீங்க. காபி வித் மில்க் அண்ட் ஷூகர். ஓ காபி பிரியரா நீங்க என்று தொலைபேசியை எடுத்த ஒரு எண்ணை தட்டி கமலா கெஸ்ட். ஒரு காபி என்று சொல்லி வைத்தார். மோகன் அவர் அறையை சுற்றிப்பார்த்தான். பிரபல மனோதத்துவ நிபுணரின் ஆலோசனை அறை என்று சொல்ல அனைத்த விஷயங்களும் இருந்தது. அவருடைய மேசையில் இவன் எழுதிய என் கைபிடித்தவன் புத்தகம் கணினி பிரிண்ட் அவுட்டாக காட்சியளித்தது. அவன் கண் போன திசையை பார்த்த அவர். ஹா ஹா, எனக்கு கம்ப்யூட்டரில் படிக்கும் பழக்கம் இல்லை. அதனால என் நண்பர் பிரிண்ட் பண்ணிக் கொடுத்துட்டார். ரொம்ப நல்லா இருந்தது. இப்ப உங்களோட இன்னொரு நாவலையும் படிச்சிட்டு இருக்கேன். நன்றி டாக்டர். உங்களை மாதிரி வாசகர் கிடைக்கிறது எனக்கு பெருமையா இருக்கு. நான் ஏதோ விளையாட்டா இணையத்துல எழுதறேன். ஓ. இல்லை இல்லை. நல்ல முயற்சி தான். நீங்க இதை பப்ளிஷ் பண்ண முயற்சி பண்ணலையா. இல்லை டாக்டர். இ...