14 கதிர் ஏதோ தொகுதி பிரச்சனையா அவருக்கு மனு கொடுக்க வந்திருக்காரு. சட்ட மன்ற உறுப்பினர் சரியா பேசலை. அடுத்த வாட்டி உனக்கு ஓட்டு போடமாட்டேன்னு கதிர் சொல்லியிருக்காரு. உன்னால ஆனதை பாத்துக்கோன்னு எம்எல்ஏ சொல்லிட்டாரு. அப்பலேர்ந்து அவரை பழி வாங்க வாய்ப்பு தேடி அலைஞ்சிருக்காரு. அவரு காலையில வாக்கிங் போகும்போது அரிவாள் எடுத்து வெட்டிட்டாரு. அந்த நேரத்துல அவரு படிச்சிக்கிட்டு இருந்த புத்தகம் ஒரு அரசியல்வாதியை பழி வாங்கற புத்தகம் மாதிரி இருக்கனும். சரியா என்றார் அந்த அரசியல்வாதியின் கையாள். என்ன சார் சொல்றீங்க. இப்ப நான் கதை எழுதி தரனும்னு சொல்றீங்க. கொலை நடந்த சமயம் அவர் ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு சொல்றீங்க. நானே இணையத்தில் வெளியிடாத புத்தகத்தை அவரு படிச்சாருன்னும் எப்படி சார் நிரூப்பிக்க போறீங்க. மோகன். நீங்க இப்ப அவருக்கு எழுதி தர வேண்டிய கதை அவரு கோர்டுல கொலை செஞ்சேன்னு ஒத்துக் வேண்டிய கதை. எங்க வக்கீல் சொல்ல போறது அவர் கொலை செஞ்ச நேரத்துல வேறு ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு. அது தேடனா கிடைச்சிடும். எல்லா மர்ம நாவல்லை கொலை கொள்ளை தானே என்றார் என்னமோ...
Comments