என்னுடைய கதை, கவிதை, கட்டுரை, புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் கருத்துக்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் - மோகன் கிருட்டிணமூர்த்தி
பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 4
2. வாக்கு வழக்கம் போலக் கோவில் வாசலில் சோனி. இரண்டு ரூபாய் எடுத்துப் போட்டேன். "விலைவாசி ஏறிடுச்சு இன்னும் இரண்டு ரூபாயே போடறே". "அது சரி விலைவாசி ஏற நானா காரணம். அதை அரசாங்கத்திடம் கேட்கனும்" என்று சிரித்துக் கொண்டே பையில் இருந்த ஐந்து ரூபாய் நோட்டை எடுத்தேன். "அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கற பொறுப்பு மக்கள் கிட்டே தானே இருக்கு" என்றான். "அட, நாம எங்க தேர்ந்தெடுக்கறோம். அவங்களா ஜெயிச்சு வந்திடறாங்க". "அதெப்படி நீ ஓட்டு போடறதில்லையா". "இல்லப்பா. நான் ஓட்டு போட்டா மாத்திரம் நிலைமை மாறப் போவுதா". "ஏன் மாறாது". "அப்ப நீ ஓட்டு போடறியா". "ஆமாம்". "அட" என்று என் ஆச்சர்யம் நீடிக்கும் முன் ஆதார் அட்டை வாக்காளர் அட்டை என்று எடுத்து நீட்டினான். "அடே இதெல்லாம் வைச்சிருக்கியா எப்படிக் கிடைச்சுது". "கோவில் அட்ரெஸ் தான்" என்றான். "யாருக்கு ஓட்டுப் போட்டே" என்ற வெகுளியாகக் கேட்டேன். சட்டென்று முறைத்தான். "அது சரி நீ ஏன் ஓட்டுப் போடலே...
1. தினசரி சமீபத்தில் ஒரு மேற்கத்திய உணவகத்தில் ஏழை சிறுவனை உள்ளே விடவில்லை என்ற செய்தி கேட்டுக் கொதித்துப் போனேன். நானும் அதை முயன்றால் என்ன என்று நினைத்து சோனியை ஒரு நாள் அழைத்துப் போனேன். ஊடகங்களில் கூக்குரல்களை அசட்டை செய்துவிட்டு அந்த உணவகத்தின் பணியாள் என்னுடன் வந்த சோனியை தடுத்து நிறுத்தினான். நான் ஏன் என்று கேட்டேன். அவர் சுகாதாரமாக இல்லை. சரியான உடை உடுத்தவில்லை. அதனால் உள்ளே விடமுடியாது என்று அவன் விளக்கமளித்தான். நான் அவ்வாறு விளக்கி எந்தப் பலகையும் உணவகத்தின் முன் வைக்கவில்லையே என்று விவாதித்தேன். சோனி சாவகாசமாக என் கையில் இருந்த செல்பேசியை என்னிடமிருந்து கேட்டு வாங்கினான். பிறகு யாருக்கோ தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். இரண்டு நிமிடம் பேசிவிட்டு அந்த உணவகத்தின் பணியாளைப் பார்த்து அந்தப் பெரிய நாளிதழின் பேரை சொல்லி அதன் நிருபர் அவனிடம் பேச விரும்புவதாகக் கூறினான். அதைக் கேட்டது அவன் நடுங்கிப் போய், "உள்ளே போங்க, உள்ளே போங்க" என்று பதறிப்போய் வழிவிட்டான். நான் ஆச்சர்யப்பட்டேன். "என்ன சோனி, அப்படி யாருக்கு போன் போட்டே ...
Comments