1. தினசரி சமீபத்தில் ஒரு மேற்கத்திய உணவகத்தில் ஏழை சிறுவனை உள்ளே விடவில்லை என்ற செய்தி கேட்டுக் கொதித்துப் போனேன். நானும் அதை முயன்றால் என்ன என்று நினைத்து சோனியை ஒரு நாள் அழைத்துப் போனேன். ஊடகங்களில் கூக்குரல்களை அசட்டை செய்துவிட்டு அந்த உணவகத்தின் பணியாள் என்னுடன் வந்த சோனியை தடுத்து நிறுத்தினான். நான் ஏன் என்று கேட்டேன். அவர் சுகாதாரமாக இல்லை. சரியான உடை உடுத்தவில்லை. அதனால் உள்ளே விடமுடியாது என்று அவன் விளக்கமளித்தான். நான் அவ்வாறு விளக்கி எந்தப் பலகையும் உணவகத்தின் முன் வைக்கவில்லையே என்று விவாதித்தேன். சோனி சாவகாசமாக என் கையில் இருந்த செல்பேசியை என்னிடமிருந்து கேட்டு வாங்கினான். பிறகு யாருக்கோ தொலைபேசியில் அழைப்பு விடுத்தான். இரண்டு நிமிடம் பேசிவிட்டு அந்த உணவகத்தின் பணியாளைப் பார்த்து அந்தப் பெரிய நாளிதழின் பேரை சொல்லி அதன் நிருபர் அவனிடம் பேச விரும்புவதாகக் கூறினான். அதைக் கேட்டது அவன் நடுங்கிப் போய், "உள்ளே போங்க, உள்ளே போங்க" என்று பதறிப்போய் வழிவிட்டான். நான் ஆச்சர்யப்பட்டேன். "என்ன சோனி, அப்படி யாருக்கு போன் போட்டே ...
Comments