என்னுடைய கதை, கவிதை, கட்டுரை, புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் கருத்துக்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் - மோகன் கிருட்டிணமூர்த்தி
பெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 12
14 கதிர் ஏதோ தொகுதி பிரச்சனையா அவருக்கு மனு கொடுக்க வந்திருக்காரு. சட்ட மன்ற உறுப்பினர் சரியா பேசலை. அடுத்த வாட்டி உனக்கு ஓட்டு போடமாட்டேன்னு கதிர் சொல்லியிருக்காரு. உன்னால ஆனதை பாத்துக்கோன்னு எம்எல்ஏ சொல்லிட்டாரு. அப்பலேர்ந்து அவரை பழி வாங்க வாய்ப்பு தேடி அலைஞ்சிருக்காரு. அவரு காலையில வாக்கிங் போகும்போது அரிவாள் எடுத்து வெட்டிட்டாரு. அந்த நேரத்துல அவரு படிச்சிக்கிட்டு இருந்த புத்தகம் ஒரு அரசியல்வாதியை பழி வாங்கற புத்தகம் மாதிரி இருக்கனும். சரியா என்றார் அந்த அரசியல்வாதியின் கையாள். என்ன சார் சொல்றீங்க. இப்ப நான் கதை எழுதி தரனும்னு சொல்றீங்க. கொலை நடந்த சமயம் அவர் ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு சொல்றீங்க. நானே இணையத்தில் வெளியிடாத புத்தகத்தை அவரு படிச்சாருன்னும் எப்படி சார் நிரூப்பிக்க போறீங்க. மோகன். நீங்க இப்ப அவருக்கு எழுதி தர வேண்டிய கதை அவரு கோர்டுல கொலை செஞ்சேன்னு ஒத்துக் வேண்டிய கதை. எங்க வக்கீல் சொல்ல போறது அவர் கொலை செஞ்ச நேரத்துல வேறு ஒரு புத்தகத்தை படிச்சிகிட்டு இருந்தாருன்னு. அது தேடனா கிடைச்சிடும். எல்லா மர்ம நாவல்லை கொலை கொள்ளை தானே என்றார் என்னமோ...
3. தானம் தேர்தல் முடிந்திருந்தது. தவறாமல் நானும் என் மனைவியும் வாக்களித்து வந்தோம். என்னால் முடிந்தவரை என் சோம்பேறி நண்பர்களைத் தொலைப்பேசியில் அழைத்து அவர்களையும் வாக்கிட வைத்திருந்தேன். ஒரு பெரிய மகிழ்ச்சி. சோனியை சந்தித்தேன். "சந்தோஷம்" என்றான். ஒரு பெரிய சமுதாயப் புரட்சியை அவன் ஏற்படுத்தியதை அறியாமல். அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. "சரி சோனி, உன்கிட்டேயும் ஞானி மாதிரி பல விஷயங்கள் கத்துக்க வேண்டியதிருக்கு. ஆனா எனக்கு என்ன கேட்கனும்னு தெரியலை. எனக்குத் தோனும்போது கேட்கறேன், சரியா" என்று சொன்னேன். "சரி, சரி" என்றான். அவனுக்குப் பிச்சையிடும் வழக்கமானவர்களை மறைப்பதாக நினைத்தான் போலும். "சோனி, பிச்சைக்காரங்களை நாங்க தான் உருவாக்கறோம்னு தெரிஞ்சிகிட்டேன். அவங்களுக்கு எப்படி உதவி பண்றது. பொது நல சேவை நிறுவனங்களை நம்ப முடியறது இல்லை. நான்-ஃபிராஃபிட் அப்படின்னு சொல்லிகிட்டு வெளிநாட்டிலேர்ந்து நன்கொடை வசூலிக்கிறாங்க. அது நிஜமாவே தேவையானவங்களுக்குப் போய்ச் சேருதான்னா இல்லை தான். என்ன பண்றது" என்று பணிவாக வினவினேன். "கடைக்கு போற இல்லை...
Comments