தொடர்கதை:இன்னும் பெயர் வைக்கவில்லை-21-நிறைவுப் பகுதி

21
பிரில்லியண்ட் என்றார் ரதீஸன்.

அது சரி இந்த ஸ்கிரிஃப்டை அரசியல்வாதி எப்படி அனுமதிச்சாரு. அவருக்கு சந்தேகம் வரலையா என்று கேட்டாள் கயல்விழி அதுவரையில் மௌனமாக கொண்டாடிக்கொண்டு இருந்தவள்.

மோகன் உடனே, வந்தது. அவன் ஏன் கொலை செஞ்சது நான் தான் ஒத்துகலைன்னு கேட்டாரு. நான் சொன்னேன்  சார் முதல்லே கொலையை ஒப்புகிட்டா கோர்டுக்கு சந்தேகம் வராதான்னு சொல்லி சமாளிச்சேன்.

அப்புறம்..

ஒரே சாதிக்காரங்கன்னு நீங்க எழுதின வரில அவங்களுக்கு சந்தேகம் வரலையா.

ஹாஹா. அது தான் நாம் செஞ்ச அதிர்ஷ்டம். ஆனா அடுத்த வரியை பிடிச்சிட்டாங்க. ஏன் அப்புறம் நீ என்னை பயன்படுத்திகிட்டு தப்பிக்க பாக்கறே. என் மனசு சரியில்லையின்னா நீ சொல்ற கதையை கேட்டு நான் ஆடறதுக்கு நான் காதுல ஒன்னும் பூ சுச்தி வைச்சிக்கலைன்னு கத்தினாருஇந்த வரி தேவையான்னு கேட்டாரு. அதுக்கு நான், சார் அவன் மனநிலையில்லை சரியில்லைன்னு இங்கே எஸ்டாப்ளீஷ் பண்ணாதான் பின்னாடி அவரை விடுவிக்கலாம் அப்படின்னு சொல்லி சமாளிச்சேன்.

மத்தக் கதை...

மத்தக் கதை எங்கே. இந்த இடத்துல கதிரவன் குணமாயிட்டாரு. மத்த கதையை எழுதினது அவருடைய ஞாபக சக்தியும் புத்திசாலித்தனும் தான். நான் கூட இப்படி ஆளுங்கட்சியை போட்டு துவைப்பாருன்னு எதிர்பார்க்கலை. எதுக்கும் நீங்க எல்லாரும் கொஞ்ச ஜாக்கிரதையாகவே இருங்க என்று முடித்தான்.

இருங்க இருங்க அந்த கதை பேப்பர்ஸ் மறுபடியும் கதிரவன் கைக்கு எப்படி போச்சு என்றார் ரதீஸன் இன்னும் புதிரிலிருந்து விடுபடாதவராக.
டாக்டர் சட்ட நுணக்கங்கள் தெரிஞ்ச ஒரு வக்கீல் நான் இங்கே இருக்கேன் மறந்துட்டீங்களா. சட்டமும் தெரியும் நீதிமன்றத்தோடு சந்து பொந்துக்களும் தெரியுமே என்றான் நகைச்சுவையுடன்.

அது சரி கயல்விழிக்கு என்ன ரோல் இதில் என்றான் மோகனும் அவனுக்கும் சில புதிர்கள் இருந்தன போலும்.

அட மோகன் சார், நானும் டாக்டரும் கயலுக்கு எல்லாம் சொல்லி அனுப்பி வைச்சோம். ஒரு வேளை கதிரவனுக்கு நல்ல நினைவு திரும்பிட்டா அவரால அவங்களையும் அவரோட அப்பா அம்மாவையும் தான் சட்டுன்னு தெரிஞ்சிக்க முடியும்.

அது சரி ஆனால் எனக்கு இன்னொரு டவுட் டாக்டர் என்றாள் கயல்விழி கண்களை அகலப்படுத்திக் கொண்டே.

சொல்லும்மா.

மோகன் சார் எழுதின ஸ்கிரிஃப்டை கதிரவன் தான் ஜெயில்லே படிச்சிட்டாரே. அப்பவே ஏன் அவருக்கு தெளிவு ஏற்படலை.

முதல்ல கதிரவன் எந்த கதை படிச்சாலும் அதோட முக்கிய பாத்திரமாக மாறராரு. அதனால அவருக்கு மத்த பாத்திரங்களோட தாக்கம் இல்லை. இரண்டாவது அவரு ஒரு கதாபாத்திரமாக முழுசா மாறனும்னா அந்த சூழ்நிலையும் அதுக்கு தக்கமாதிரி இருந்தா சுலபமா இருக்கும். இப்ப ஒருத்தும் இல்லாத இடத்துல அவரு மாறினா அந்த மாற்றம் அவராலேயே உணர முடியாது. மூணாவது இது என்னோட கணிப்பு தான் ஏன்னா நான் கோர்ட்டுக்கு வரலையே – சரவணன் சாட்சி சொல்லும் போது அவரோட பேச்சால அவருக்கு மனமாற்றம் டிரிகர் ஆயிருக்கு. படிக்கும் போது அவரு கதிர் கதாபாத்திரத்தோட அதிகமா நூல்பிடிச்சு போனதால அப்ப அந்த மாற்றம் ஏற்படலை. அதுக்கும் மேலே இன்னும் சில நாட்கள்ல நாங்க முன்னாடி யோசிச்சு வைச்ச வைத்தியத்தை செஞ்சிருந்தாலே அவரு குணமாகியிருப்பாரு. ஏன்னா இயற்கையாகவே அவர் ஒரு ஜீனியஸ். ஆனா இப்படியெல்லாம் நடந்து போச்சு என்று சொல்லி முடித்தார்.  

அது என்ன வைத்தியம் டாக்டர் என்று ஆர்வமாக கேட்டாள் கயல்விழி.
அது வேண்டாம்மா. அது இன்னொரு பெரிய கதையாயிடும்.

எது எப்படியோ எனக்கு வண்டி நிறைய கதைகள் கிடைச்சிடுத்து என்றான் மோகன். எனக்குதான் இந்த வழக்கால ஒரு வழக்கும் வரலை என்றான் சுரேஷ் பொய்யாக கோபித்துக் கொண்டே.

கவலைப்படாதீங்க சுரேஷ் உங்களை பத்தி கதை எழுதிய பிரபலமாக்கிடறேன் என்றான் மோகன்.

கதிரவன் மீண்டும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தான்.

சுரேஷ் புன்னகையுடன் மறுபடியும் ஒரு கேஸ் வந்தா என்கிட்டே வாங்க. கோட்டுக்கு போகாமலேயே சால்வ் பண்ணிடலாம் என்றான்.

ஆமாம்பா என் பேஷண்ட் எனக்கு ஃபீஸே கொடுக்க வேண்டாம். வக்கீலுக்கு மாத்திரம் கொடுத்தா போதும் என்றார் ரதீஸன் மன நிறைவுடன்.
முற்றும்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்