Posts

Showing posts from August 4, 2013

தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 12

12 அவர்கள் இருவரும் பல மணி நேரம் பேசினர். நடுவில் ரதீஸனின் மனைவி இருமுறை வந்து காபி சாப்டறீங்களா என்று கேட்க தண்ணி மட்டும் கொடுத்துட்டு உள்ளே போ என்ற காட்டமாக கூறியிருந்தார்.  அவருடைய மனைவியும் என்ன பிரச்சனையோ என்று குழப்பத்துடன் உள்ளே சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். அவர்கள் சென்ற பிறகு இருவரும் அமைதியாக இருந்தனர். என்ன சார் ஏதோ உங்களுக்கு உதவி பண்ண வந்து பெரிய பிரச்சனையில் மாட்டிக் கிட்டேன என்றான் மோகன். இருங்க மோகன் பதட்டப்படாதீங்க. இது மாதிரியெல்லாம் வரும்னு யாரு ஏதிர் பார்த்தது. நம்ம இரண்டு பேருக்கும் நல்ல புத்தி சுவாதீனம் இருக்கும்போதே நாம இந்த பிரச்சனையை பார்த்து கலங்கறோமே, பாவம் கதிர் அவரு இருக்கும் நிலையில் எப்படி இதை சமாளிப்பாரு ? சொல்லுங்க. மன்னிக்கனும் சார். நான் என்னோட வேலை பளுவில் ஏதோ பிரச்சனையில் மாட்டிக்க வேண்டாம்னு சுயநலமா பேசிட்டேன். நீங்க சொல்லறது சரிதான். கதிருக்கு உதவி பண்ணனும். ஆனா இந்த கட்சிக்காரர் அவங்க ஆளுங்க செஞ்ச கொலையை கதிரை ஏத்துக் வைக்கனும்னு சொல்றாரே. அதவும் அவங்க கொலை பண்ணது ஒரு எதிர் கட்சி எம்எல்ஏவை. இது பெரிய விவகாரம் சார். எத்தனை

தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 11

11 கதிரை தேடிச் சென்று பல இடங்களில் தேடிய பிறகு அவனை ஊருக்கு அழைத்து வந்தனர் மோகனும் ரதீஸனும். தங்களுக்கு சம்பந்தம் இல்லாத விவகாரம், காவல் துறை செய்ய வேண்டிய வேலை என்று இருவரும் நினைத்திருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் ஏதோ ஒரு உந்துதலில் காரியத்தில் இறங்கி விட்டனர். மோகனுக்கு அலுவலத்தில் விடுப்பு சொல்லி விட்டு இறங்கியிருந்தான். இருவரும் களைப்பாறிய பின் மாலையில் சந்தித்தனர். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர். டாக்டர் கதிரவனுக்கு எப்படி இருக்கு. இன்னும் மயக்கத்தில் தான் இருக்காரு மோகன். சீக்கிரம் நம்ம நாவலை அவரை படிக்க வைக்கனும். உங்க திட்டம் என்ன டாக்டர் ? நீங்க எழுதின என்னோட கதையை படிக்க வைக்கப் போறேன். ஒவ்வொரு அத்தியாயம் படிக்கும் போது அவருக்குள்ள ஏற்படற மாற்றங்களை ஊர்ந்து கவனிக்கப் போறேன். அவரு என்னை மாதிரி மனோதத்துவ மருத்துவரா மாறனும். அதுக்கப்புறம் நிஜமான என்னோட நோயாளிகளை அவருக்கு அனுப்பப் போறேன். அதுக்கப்புறம் நீங்க புது நோயாளியா அவர் கிட்டே வரீங்க. என்ன நான் நோயாளியாகவா எதுக்கு டாக்டர் ? சொல்றேன். இப்ப அவரு தன்னை ஒரு பெரிய மருத்துவரா நினைச

தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 10

10 அந்த புது சுவாமிஜி ஆங்கிலத்திலும் தமிழிலும் தத்துவங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். பலரும் அவர் பேசுவதை உன்னிப்புடன் கவனித்தாலும் வியப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த புது சுவாமிஜி வேறு யாரும் இல்லை நான் தான். என்னை அழைத்துக் கொண்டு வந்த பெரியவர் என்னை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டிருந்தார். சும்மா இல்லாமல் பல புத்தகங்களையும் என் அறைக்குள் வைத்துச் சென்றிருந்தார். நானும் புது அவதாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தேன். நீரில் குதித்து எத்தனை நாட்களுக்கு பிறகு எனக்கு விழிப்பு வந்ததென்றே தெரியாது. ஏதோ நாட்டு வைத்தியம் செய்திருந்தார்கள் எனக்கு. பல நாட்களுக்கு பிறகு என்னை இரண்டு பேர் பார்க்க வந்திருந்தார்கள். “ வணக்கும் சுவாமிஜி நாங்க இரண்டு பேரும் தமிழ் நாட்டிலேர்ந்து வந்திருக்கோம். எங்க ஊரில் ஒரு ஆன்மீக விழிப்புணர்வு பேரவை நடத்தறோம். அதுல தமிழ் தெரிஞ்ச உங்களை மாதிரி மஹான் வந்து பேசனா நல்லா இருக்கும்னு நினைக்கறோம். நாங்களே உங்களுக்கு போற வர செலவு எல்லாம் செஞ்சி அழைச்சிகிட்டு போறோம். சம்மதமா ?” அவர் என்னை மஹான் என்று அழைத்தது எனக்கே விநோதமாக இருந்தத

தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 9

9 எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. முதலில் எனக்கு ஏற்பட்டுள்ள குறையால். அடுத்து என்னை சுற்றி இருப்பவர்களின் கண்டிப்புகளால். இப்போது இந்த மருத்துவரின் பரிசோதனைகள். என்னையும் என்னுடைய சமுதாயத்தில் கொஞ்சம் நஞ்சம் பாக்கி இருந்த மரியாதையையும் வைத்து. எனக்கு ரதீஸனின் மேல் மிகவும் கோபமாக வந்தது. நான் மிகவும் நொந்து போயிருக்கிறேன். என்னை தேட வேண்டாம். மனம் அமைதியானதும் திரும்பி வருகிறேன். தற்கொலை செய்துக் கொள்ள மாட்டேன். கவலை வேண்டாம் என்று எழுதிவிட்டு கொஞ்சம் பணமும் சில துணி மணிகளும் எடுத்துக் கொண்டு அன்றே இரவோடு இரவாக புறப்பட்டேன். கயலை நினைத்து வருத்தமாக இருந்தது. அம்மா அழுது புலம்புவாள். ஆனால் எனக்கு வேறு வழி தோன்றவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக முடிவு எடுக்கும் சக்தியை இழந்துக் கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. டில்லிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு ரயிலில் வந்து அமர்ந்தேன். சுற்றும் முற்றம் அனைவரும் என்னை பார்ப்பது போல் ஒரு உணர்ச்சி தோன்றியது. நேராக கழிவறைக்கு சென்று கண்ணாடியில் என் முகத்தை பார்த்துக் கொண்டேன். சாதாரணமாக தான் இருந்தது. யாரும் என்னை பார்க்கவில்லை என்று சொல்லிக்

தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 8

8 மோகன் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தான். இது அவனுக்கு புதிய வேலை. ஒருவர் கதை சொல்லி அதை எழுதுவது. கதை எழுதுவது என்பது ஒரு கைதேர்ந்த மருத்துவர் செய்யும் அறுவை சிகிச்சை போன்றது. மருத்துவருக்கு அனைத்து அத்தியாயங்களும் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பே தெரிந்திருக்க வேண்டும். சிகிச்சை ஆரம்பித்த பிறகு நடுவில் இதயத்தை அறுப்பதை நிறுத்திவிட்டு யோசிக்க முடியாது. அல்லது கடைசியில் எப்படி முடிக்கப் போகிறோம் என்று நடுவில் திணற முடியாது. கதையாசிரியருக்கும் அதே நிலைமை தான். ஒரு வரி கதை கொண்டு எழுது ஆரம்பிப்பது என்பது வியாபார ரீதியாக எழுத தான் முடியும். மாதம் ஒரு முறை பாக்கெட் நாவல் எழுதுவது இந்த ரகம். Quantity இருக்கும் Quality இருக்காது. அது போலவே எழுதுவதை தொழிலாக கொண்டு எழுதுபவர்களும். இந்த பிரசுரத்திற்கு எழுதி தரவேண்டும் அந்த பிரசுரத்திற்கு எழுதி தர வேண்டும். எதை எழுதினாலும் படிப்பார்கள். எதை எழுதினாலும் வெளியிட்டு விடுவார்கள். ஒரு தடவை பெயர் கிடைத்த பிறகு என்ன வேண்டுமானாலும் எழுதலாம். அல்லது நாமே வெளியிடும் போது தரம் நாம் சொல்லும் தரம் தான். இப்படி பல வி

தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 7

7 மருத்துவர் ரதீஸனின் சோதனைக்கு நான் பலியான கதை சொல்லியே ஆக வேண்டும். பல பிரச்சனைகளை சந்தித்தபின்னும் நான் குணா கமல் குண்டக்க மண்டக்க பார்த்தீபன் அந்நியன் விக்ரம் என்று என் காதுபட பட்டப் பெயர்களை சூட்டி மகிழ்ந்தவர்கள் ஒரு புறம் இருக்க நானாக போய் ஏதாவது படிக்கப் போய் மாட்டிக் கொண்டு நண்பர்களிடமும் உறவினர்களிடமும் திட்டும் வாங்கிக் கொண்டிருக்க , எதுவுமே வேண்டாமடா என்று எதையும் படிக்காமல் சில நாட்கள் நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ஒரு புத்தகத்தை கொடுத்து அதை நான் படிக்க வேண்டும் என்றும் அவர் என்னையும் என்னில் ஏற்படும் மாற்றத்தையும் கூர்ந்து கவனிக்க அவருடைய விருந்தனர் அறையிலேயே என்னை தங்கவும் சொல்லியிருந்தார். நோயிலிருந்து முற்றிலும் விட பட வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் மறுபுறம் என்னை பார்த்த தினமும் வருந்தும் பெற்றோர்களுக்கு ஒரு விடிவு காலம் வரவேண்டும் என்ற எண்ணம் ஒரு புறமும் என்னை உந்தித் தள்ளியது. அவர்களுக்கு வந்திருப்பதும் ஒரு நோய் தான். மகனாக நான் பிறந்த நோய். இந்த இரண்டு நோய்களும் குணமாகி மறுபடியும் என்னை தாழந்து பார்த்தவர்களை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்ற வெறி உரு