மலரும் நினைவுகள்:கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு
கலை கழக போட்டி - நெஞ்சை நெகிழ வைத்த கனவு கனவுகள் வராத தூக்கம் எனக்கு என்று சொல்லி சந்தோஷப்படுபவன் நான். மன்றத்திலும் பல முறை சொல்லியிருக்கிறேன். இவ்வாறு இருக்க கடுமையான பணி சுமையினாலும் சில மாற்றம் கண்டுள்ள உணவு, உறக்கம் பழக்கத்தினாலும் இன்று அதிகாலையில் ஒரு கனவு வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு IT Open Minds 2007 எனும் Computer Seminar நடந்தது. அதற்கு பார்வையாளனாக சென்றிருந்தேன். அதில் திறவுமூல மென்பொருட்களை பற்றி பேசிய பேச்சாளர், சபையை பார்த்து Linux ல் பரிட்சயம் உள்ளவர்கள் மேடைக்கு வந்து பேசலாம் என்றார். நான் மேலே சென்று ஒரு பத்து நிமிடம் பேசினேன். பரிசாக ஒரு T-shirt ம் ஒரு புத்தகமும் கொடுத்தார்கள். பள்ளிப்பருவத்தில் மேடை பேச்சு அனுபவங்களை புதுமைபடுத்திச் சென்றது இந்த நிகழ்ச்சி. பள்ளியில் வருடா வருடம் கலை கழக போட்டி நடக்கும். கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியர் ஏதாவது ஒரு பள்ளியில் கூடுவார்கள். பேச்சு, கதை, கவிதை, கட்டுரை, ஓவியம், இசை, வில்லுபாட்டு போன்ற பல போட்டிகள் நடக்கும். சுமார் 64 பள்ளிகள் பங்கு பெறும். பிறகு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ந...