கட்டுரை - உங்களை அளக்க GYRO அளவு கோல்

உங்களை அளக்க GYRO அளவு கோல்

GYRO அளவு கோல் திசைகளை அளக்க உபயோகப்படுகிறது. அதைத் தவிர இந்த கட்டுரைக்கு அதனுடன் வேறு சம்பந்தம் இல்லை. நான் கைரோ என்று குறி்ப்பிடுவது G-க்ரீன், Y-யெல்லோ, R-ரெட், O-ஆரஞ்ச்.

இவை என்ன என்று பார்ப்போம்.




ஒரு வரைப்படத்தில் இரு பாகங்கள் இருக்கின்றன. இடமிருந்து வலமாக இருக்கும் கோடு ஊழியரை குறிக்கிறது. நடுவிலிருந்து இடமாக இருப்பது பாதமான நிலை, நடுவிருந்து வலமாக இருப்பது சாதகமான நிலை.

மேலிருந்து கீழாக இருக்கும் கோடு நிர்வாகத்தை குறிக்கிறது. நடுவிலிருந்து மேல்புறம் சாதகம் என்றும் நடுவிலிருந்து கீழ் புறும் பாதகம் என்றும் கொள்வோம்.
Y (M-Management) அச்சு ஒரு நிறுவனத்தின் நிர்வாகத்தை குறிப்பதாக வைத்துக் கொள்வோம். X (E-Employee) அச்சு அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
+ - Positive சாதகமான நிலை - Negative - பாதகமான நிலை

இந்த வரைப்படத்தை வைத்துத்தான் இந்த GYRO கூற்று.

பச்சை பெட்டி
நிர்வாகம் - சாதகமான நிலை. ஊழியர் - சாதகமான நிலை.
இந்நிலையில் நிர்வாகம் ஒரு ஊழியருக்கு சரியான சம்பளம், பயிற்சி, வாய்ப்பு, அதிகாரம் கொடுத்ததாக நினைக்கிறது. ஊழியரும் அப்படியே நினைக்கிறார்.

மஞ்சள் பெட்டி
நிர்வாகம் -பாதகமான நிலை. ஊழியர் -சாதகமான நிலை.

இந்நிலையில் நிர்வாகம் ஒரு ஊழியருக்கு சரியான சம்பளம், பயிற்சி, வாய்ப்பு, அதிகாரம் கொடுத்ததாக நினைக்கிறது. அப்படியும் அவர் சரிவர இயங்கவில்லை என்று நினைக்கிறது. ஊழியரோ தனக்கு சரியான சம்பளம், பயிற்சி, வாய்ப்பு, அதிகாரம் கிடைத்திருப்பதாக நினைக்கிறார்.


சிவப்பு பெட்டி
நிர்வாகம் -பாதகமான நிலை. ஊழியர் -பாதகமான நிலை.
இந்நிலையில் நிர்வாகம் ஒரு ஊழியருக்கு சரியான சம்பளம், பயிற்சி, வாய்ப்பு, அதிகாரம் கொடுத்ததாக நினைக்கிறது. அப்படியும் அவர் சரிவர இயங்கவில்லை என்று நினைக்கிறது. ஊழியரோ தனக்கு சரியான சம்பளம், பயிற்சி, வாய்ப்பு, அதிகாரம் கிடைக்கவில்லை. அதனால் தன்னால் சரிவர இயங்கமுடியவில்லை என்று நினைக்கிறார்.

ஆரெஞ்சு பெட்டி
நிர்வாகம் - சாதகமான நிலை. ஊழியர் - பாதகமான நிலை.

இந்நிலையில் நிர்வாகம் ஒரு ஊழியருக்கு சரியான சம்பளம், பயிற்சி, வாய்ப்பு, அதிகாரம் கொடுத்ததாக நினைக்கிறது. ஊழியர் நன்றாக பணிபுரிகிறார் என்றோ, அவருக்கு திறமை இருக்கிறது என்றோ நினைக்கிறது.
ஊழியரோ தனக்கு சரியான சம்பளம், பயிற்சி, வாய்ப்பு, அதிகாரம் கிடைக்கவில்லை. அதனால் தன்னால் சரிவர இயங்கமுடியவில்லை என்று நினைக்கிறார்.


உலகத்தில் எந்த நிறுவனத்தின் நிர்வாகமும் இந்த நான்கு பெட்டிகளுக்குள் தான் அடங்கும். அதுபோல உலகத்தில் எந்த நிறுவனத்தின் ஊழியரும் இந்த அளவைக்குள் அடுங்குவர். புதிய ஊழியர், அவருக்கு இன்னும் தன்னை நிர்வாகத்திற்கு நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் அவரை தற்காலிகமாக நீலப்பெட்டியில் வைத்துவிட்டு பிறகு இந்த வரைப்படத்திற்குள் கொண்டு வரலாம்.

பச்சைப் பெட்டியில் ஒவ்வொரு ஊழியருக்கும் நிரந்தரமாக இருப்பது தான் ஒரு சவாலாக இருக்கிறது. அதுபோலவே ஒவ்வொரு நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும். இது ஒரு Ideal Condition சிறந்த நிலைபாடு எனக் கொள்ளலாம். அது போல் இருந்தால் இருவருக்குமே நல்லது. 

மஞ்சள் பெட்டியில் ஒரு ஊழியன் இருக்கும் பட்சத்தில் நிர்வாகம் தாம் அந்த ஊழியருடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதை அவருக்கு தெரிவித்து, என்ன அவரிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிறது என்பதையும் தெளிவுப் படுத்துவது கடமையாகிறது. மேலும் அவரை பச்சைப் பெட்டியில் வெகு விரைவில் கொண்டு வரும் முயற்சியில் முனைய வேண்டும்.

சிவப்பு பெட்டியில் இருக்கும் பட்சத்தில் நிர்வாகம் அந்த ஊழியரை நீக்கிவிடுவதே நல்லது. அவரை மேலும் நிறுவனத்தில் வைத்திருப்பது விரும்பத்தக்கது அல்ல. அதுபோல அந்த ஊழியரும் இதை அறி்ந்துக் கொண்டு வேலை விடுவது நல்லதே.

ஆரெஞ்சு பெட்டியில் இருக்கும் பட்சத்தில் ஊழியர் தாமாகவே நி்ர்வாகத்திடம் சென்று தான் எதிர்பார்ப்பதை தெரிவித்து தன் பிரச்சனைகளை தீர்க்க வழி தேடவேண்டும். விரைவில் பச்சைப் பெட்டியில் நுழைந்துக் கொள்ளவேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.

ஒரு நிர்வாகத்தின் வெற்றி அவர்களுடைய ஊழியர்களை சந்தோஷமாக வைத்திருப்பது தான். அதுவே அவர்களுடைய வாணிப ரீதியான வெற்றிக்கு ஆதாரம்.

அது போலவே ஒரு ஊழியனுக்கு தன்னுடைய நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகளை சந்தித்து அவர்களை சந்தோஷப்படுத்துவதே கடமையாகும். இவ்வாறான நிலையில் அவர் தன்னுடயை தனிப்பட்ட இலக்குகளை அடைவதோடு மட்டுமல்லாமல் குடும்ப வாழ்கையிலும் மகிழ்ச்சி காண்பர்.

சுருங்கச் சொன்னால் உங்களை அடிக்கடி GYRO அளவு கோல் மூலம் அளந்துக் கொள்ளுங்கள். சந்தோஷமாக இருங்கள்.

~மோகன் கிருட்டிணமூர்த்தி

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி