சிறுகதை: பாகிஸ்தானிய கூடாரத்தில் ஓர் இரவு

பாகிஸ்தானிய கூடாரத்தில் ஓர் இரவு

பாகிஸ்தான் கூடாரத்தில் ஒரு நாள் வெற்றி கரமாக புகுந்தேன். நம்மூரிலேயே நீ துரை மாதிரி இருக்கேடா என்பார்கள் என் கூட்டாளிகள். அத்தனை சிவப்பு நான். வடக்கத்தியர்கள் மற்ற நம்மூர்கார்ரகளை காலியா என்று கிண்டல் செய்தபோதும் என்னை பார்த்தே அவர்கள் பொறாமை படும் அளவிற்கு அந்த அளவுக்கு நிறம் எனக்கு.

நான் இந்திய ராணுவத்தில் சேர்ந்த ஒரிரு ஆண்டுகளுக்குள்ளே இவன் உளவு துறைக்கு லாயக்கு என்று என்னை அங்கேமாற்றிவிட்டார்கள்.

எங்க ஊர் நாடகத்திலே நான் பல விதமான தமிழில் பேச அசத்துவேன். வேறு மொழிகள் கற்பதில் கடினமே இல்லை எனக்கு. ஹிந்தி பஞ்சாபி மலையாளாம் எல்லாம் சுலபமாக கற்றுக் கொண்டேன்.

அம்மா போய் சேர்ந்த பிறகு சொல்லிக் கொள்ளும் படி உறவு ஒன்றும் இல்லை. அதனால் தான் பாகிஸ்தான் போகவேண்டும் என்று சொன்னதும் ஏற்றுக் கொண்டேன். அதற்கு பிரத்யேக பயிற்சி வேறு கொடுத்தார்கள்.

மெதுவாக எல்லை கடந்து உள்ளே புகுந்ததும் அந்த ஊர் ரூபாய் காட்டி ஒரு லாரியில் இன்னும் சற்று தூரம் ஊடுருவினேன். அவர்கள் கலாச்சார உடையான சல்வார் கம்மீஸ் அணிந்திருந்தேன். அந்த வண்டி வேறு பக்கம்

புகுந்துவிட்டதால் என்னை ரோட்டோரத்தில் இறக்கிவிட்டார்கள். இரவு மணி 8.
மெதுவாக பையில் கொண்டு வந்திருந்த உணவு பொருட்களை உள்ளே தள்ளிவிட்டு தண்ணீர் பாட்டிலிருந்து நீரை குடித்துவிட்டு திரும்பிய போது இரண்டு பாகிஸ்தானிய காவல்காரர்கள் நின்றிருந்தார்கள்.

யார் நீ என்றார்கள்.

நான் உளவுத்துறை என்றேன் அவர்கள் பேசின அதே பாஷையில்.

ஓ அப்படியா. என்ன திட்டம்.

இந்தியாவுக்கு உள்ளே நுழையனும் நாளை அதிக காலையில் என்றேன் சரளமாக.

ஓ அப்படியா இன்ற இரவு எங்கள் செக் போஸ்டில் தூங்கிவிட்டு நாளைக்கு காலை போகலாம் என்றார் அந்த இருவரில் ஒருவர்.

ஓ தாராளமா என்று அவர்களுடன் சென்றேன். எந்த நேரத்திலும் பதட்டம் கூடாது, பயம் கூடாது உள்ளூர் மக்களுடன் கலந்துவிட வேண்டும் என்று பல மாதிரியான பயிற்சிகளுக்கு நாங்கள் உட்படுத்தப்பட்ட பிறகே இது போன்ற பயங்கரமான பணிகளுக்கு அனுப்புவார்கள். உயிருடன் திரும்பி வருவது 10ல் ஒருவர். பலர் பாகிஸ்தானிய சிறைகளில் 25 வருடங்களுக்கும் மேலாக இருக்க வேண்டி வரும்.

அவர்களுடன் சென்று அமர்ந்ததும் பல கதைகள் பேசிக் கொண்டிருந்தோம். நான் இந்திய உளவாளி என்பதோ அல்லது அவர்களுடைய பாதுகாப்பு ராணுவ திட்டங்களை பற்றி அறிய முற்படுவது போலோ நான் காட்டிக் கொள்ளவில்லை.

ரொட்டியும் சப்ஜியும் வந்தது. ஒருவன் அதில் பீர் சாப்படறியா என்று கேட்டான்.

நான் 5 முறை தொழும் மூஸ்லீம் என்றே விரைப்புடன்.

அட போப்பா. குடிக்கிறியா என்று சொல்லிக் கொண்டே மூன்று பாட்டில்களை எடுத்து வந்தான். அங்கு சுற்றும் முற்றும் பார்த்ததில் பல காலி பாட்டில்கள். சரிதான் இது தினமும் நடக்கும் கூத்து போல என்று நினைத்து அவனை பார்த்து கண்ணடித்துக் கொண்டே ஒரு பாட்டிலை வாங்கிக் கொண்டேன்.

நீ எந்த ஊரு என்று ஒருவன் கேட்டான்

பைசலாபாத் என்றேன்

ஓ அப்படியா என் தம்பியும் அங்கு தான் உளவுதுறையில் இருக்கிறான். எனக்கு சற்று பக்கென்றிருந்தது. அடுத்த கேள்வியை எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.

இன்னொருவன் என்ன நீ நாளைக்கு வசீர் வர ரூட்டை பத்தி ஒன்னும் கேட்க வில்லையே என்றான்.

எனக்கு திக்கென்றிருந்தது.

இன்னொருவனோ ஏன் அவன் நம் தலைவர் வர ரூட்டை பத்தி தெரிஞ்சுக்கனும் என்றான்.
இவன் இந்தியன் என்று சொல்லிக் கொண்டே முழுவதுமாக சொல்லிக் கொண்டு பாட்டிலை உடைத்தான்.

நீ இந்தியனா என்று கோபமாக கேட்டான் முதல் ஆள்.

ஆம் என்றேன். அமைதியாக.

இருவரும் உடனே வெளியே சென்று ஏதோ பேசினார்கள். நான் அமைதியாக ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

சுற்றி பார்த்ததில் பல பாலிவுட் நடிகைகளின் புகைப்படங்கள், பல இந்திய படங்களின் டிவிடிக்கள்.

நீ எங்க விருந்தாளி. உன்னை பார்த்துக்க வேண்டியது எங்க பொறுப்பு. ஆனா நீ எங்க நாட்டுக்குள்ளே நுழையாம உங்க நாட்டுக்கே திரும்பி போய்விட வேண்டும். சரியா என்று கேட்டான் நட்புடன்.

ரொம்ப நன்றி என்றேன். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்.

பிறகு இந்தியாவை பற்றி பல கேள்விகள் கேட்க நான் அனைத்திற்கும் பொறுமையாக பதில் அளித்துக் கொண்டிருந்தேன்.

உங்களை பார்த்தால் எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது. நானும் இந்தியனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். உங்கள் நாட்டில் எத்தனை சுகந்திரம். எத்தனை வளர்ச்சி. கலைதுறை எத்தனை அமைதியாக அதன் பணி செய்துக் கொண்டிருக்கிறது. எத்தனை பணக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்க நான் பதிலுக்கு ஆம் நண்பரே இந்தியா அருமையான நாடு. ஆனால் சமீப காலத்தில் உங்கள் நாட்டிலிருந்து எத்தனை தொந்தரவு தெரியுமா என்றேன்.

மும்பை தாக்குதலை சொல்கிறாயா என்று கேட்டான்

ஆம்.

அது எங்கள் கட்டுபாட்டிலும் இல்லை.

நீ ஹிந்துவா என்று கேட்டான் இன்னொருவன்.

ஆம்.

அப்பா, இத்தனை அழகாக எங்கள் மொழி பேசுகிறாய் பார்த்தாலே முஸ்லீம் மாதிரி தான் இருக்கிறாய் என்றான்.

ஹா ஹா என்று சிரித்தேன்.

நீ எந்த ஊர் தில்லியா மும்பையா.

ஹா ஹா நான் தமிழ் நாடு என்றேன்.

தமிழ் நாடா அது எங்கே இருக்கிறது

அது ஹைதராபாத் பக்கத்தில் இருக்கிறது.

ஓ அத்தனை தூரமா.

ஆம்.

சரி ரொம்ப நேரமாகிவிட்டது. நீ போய் தூங்க. நாளை எங்கள் மேல் அதிகாரி வருவதற்கு முன் போய்விடு என்று சொல்லி விட்டு என்னை கட்டி அணைத்தான்.

நானும் அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு உறங்கச் சென்றேன் ஒரு ஒரத்தில் எனக்காக அமைக்கப்பட்ட காகிதப் படுக்கையில். தூங்கினாலும் தூங்கக்கூடாது என்பது தான் உளவுதுறையில் ஒரு பாடம்.

அவர்கள் வெளியே காவலுக்கு சென்று நின்றார்கள். சுமார் ஒரு மணி நேரம் பிறகு நான் தூங்குகிறேனா என்று பார்த்துவிட்டு இருவரும் செக் போஸ்டிற்கு சற்று தொலைவில் சென்று ரகசியமாக பேசினார்கள். நான் சட்டென்று எழுந்து அவர்களுக்கு சற்று தொலைவில் நின்று அவர்கள் பேசுவதை கேட்டேன்.ஐந்து மணிக்கு அதிகாரி வருவாரு. நாம் 4.30க்கு இவனை எழுப்பிட்டு அவனை ஓட விட்டு சுட்டுடலாம். சாவட்டும் இந்தியன். அப்பதான் நம்மை தாக்க வந்தான் நாம் சுட்டுட்டோம்னு சொல்லிடலாம் என்று சொல்ல இன்னொருவன்
ஏற்றுக் கொண்டான்.

திரும்பி வந்து அவர்கள் பார்க்கும் போது மீண்டும் தூங்கிக் கொண்டிருந்தேன் நான்.
மறு நாள் 4.25ந்து என்னை பார்க்க வந்தான். தூங்கிக் கொண்டிருந்தேன்.

4.30 மீண்டும் வந்தார்கள் நான் அங்கு இல்லை.

7.30 மணிக்கு டான் நியூஸ் பாகிஸ்தானிய தொலைகாட்சியில் பாகிஸ்தானிய ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி பங்கு கொள்ளவிருந்த நிகழ்ச்சியில் குண்டு வெடித்ததாகவும் அதில் உள்துறை அமைச்சர் கொல்லப்பட்டார் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சிலர் தாலிபானாக இருக்குமோ அல்லது இந்தியாவின் உளவுதுறையின் வேலையாக இருக்கும்
என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அம்மாவை போய் சந்தோஷமாக பார்த்தேன்.
 
-மோகன் கிருட்டிணமூர்த்தி

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி