ஞானி -10. அழகு

ஞானி -10. அழகு
“கடல் எத்தனை அழகாக உள்ளது” என்று சொல்லி ஒரு நாள் மாட்டிக் கொண்டேன்.

சிரித்தான்.

“அழகான வெள்ளை நுரை அலைகள். எல்லையற்ற வானமும் நீலக் கடலும் தொட்டுக் கொள்ளும் காட்சி ஆகா அழகு”.

“எது அழகு? இதுவா?”

“ஆம்”.

“இதுவா?”

“ஆம். ஏன்?”

“மக்களுக்கு எது அழகு எது அழகில்லை என்பதே தெரிவதில்லை”. மெதுவாக சொன்னான்.

“என்ன சொல்கிறாய்?”

“அழகு அழகில்லை”.

“என்ன?”

“ஆம். அழகான ரோஜா ஆறே நிமிடம். அதை அழகு என்கிறார். குழந்தை அழவதைக் கேட்டு ஆகா என்பார். ஆனால் எதற்கு என்று அறியார். அழகு அனைத்தும். ஆனால் அழகு ஒன்றும் இல்லை”.

“நீ எப்போதும் புரியாததையே பேசுவாய்”.

“புரிந்துக் கொள்ள முயற்சி செய்வதில்லை. காரணம் நீ மனிதன். போ! நான் சொன்னதில் ஒன்றையாவது புரிந்துக் கொள்ள முயற்சி செய”;.

தலை தூக்கி பார்ப்பதற்குள் அவன் போயேவிட்டான்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி