Skip to main content

கட்டுரை: புத்தகம் படிக்கும் முறை-1

புத்தகம் படிக்கும் முறை

நான் என் முறையை எழுதுகிறேன்.

நான் பின்பற்றும் முறை

தொழில் நுட்ப புத்தகமானால் மூன்று நிற Highlighters எடுத்துக் கொள்வேன்.

1. மஞ்சள் - Definition, உதாரணமாக Protocol என்று வைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய விவரத்தை நாம் வெவ்வேறு மாதிரியாக கொள்ள முடியாது அல்லவா. ஆக எங்கெல்லாம் இது போன்றவற்றை காண்கிறேனோ அந்த வரிகளை மஞ்சள் கொண்டு குறித்துவிடுவேன்.

2. பச்சை - Statistics, புள்ளிவிவரங்கள். அதாவது CAT 5 UTP Cable 100 metre தான் வேலை செய்யும் என்றால், இதையும் நம் இஷ்டத்திற்கு மாற்ற முடியாது. ஆக 1, 2 இரண்டையும் மனப்பாடம் செய்ய வேண்டும்.

3. மென்சிவப்பு - Examples, உதாரணங்கள். இதை படித்தால் மற்ற இரண்டும் நினைவுக்கு வரவேண்டும். இதை மனப்பாடம் செய்யத் தேவையில்லை. ஆனால் சுவாரஸ்ய உதாரணங்களுடன் நினைவு கொள்ள வேண்டும்.

முதல் முறை 250 பக்கம் புத்தகம் படிக்க 8 மணி நேரம் ஆகும் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் முதலிருந்து கடைசிவரை அனைத்து பக்கங்களும் அடங்கும். Appendix, Glossary, Printed & Published by உட்பட.

இரண்டாவது முறை வெறும் மஞ்சள், பச்சை, மென்சிவப்பு செய்த வரிகளை மட்டும் படிக்க வேண்டும். சுமார் 2 மணி நேரம் ஆகும். இரண்டாவது முறை படிக்கும் போது பென்சிலால் பெருக்கல் குறி போட்டு நால்புறமும் புள்ளியிட்டு கொள்வேன். இது பள்ளிக்கூட பழக்கம். மிக முக்கியமானது என்று அறிய.

மூன்றாவது முறை 250 பக்கம் படிக்க வெறும் 15 நிமிடங்கள் ஆகும். ஏனென்றால் முக்கிய குறியிட்ட பகுதிகள் மட்டுமே படிப்பேன்.
மூன்று முறைக்கு பிறகு படிப்பதில்லை.


இன்னும் சில பழக்கங்கள் மிக வெற்றிகரமாக 10 வருடங்களுக்கு மேலாக செய்து வருகிறேன். இது சற்று வித்தியாசமானது. முயற்சி செய்து பாருங்கள்.

அதே 250 பக்கம் கொண்ட புத்தகத்தை எடுத்துக் கொள்வோம். சுமார் 10 அத்தியாயங்கள் இருக்கிறது. இதுவும் தொழில்நுட்ப, கல்வி புத்தகங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

பக்கங்கள் இவ்வாறாக பங்கிடப்பட்டுள்ளன என்று வைத்துக் கொள்வோம்.

Chapter 1 - 13
2 - 25
3 - 40
4 - 7
5 - 13
6 - 22
7 - 15
8 - 54
9 - 37
10 - 24

இப்போது பார்த்தால், 4, 5, 1, 7, 6, 10, முறையே ஏறுவரிசையில் வரிசைபடுத்தி இருக்கிறேன். மொத்தம் 94 பக்கங்கள் உள்ளன அல்லவா. ஆனால் 10 அத்தியாயம் உள்ள புத்தகத்தில் 6 அத்தியாயங்கள் சேர்த்து மொத்தம் 94 பக்கங்கள் தான். இதை நாம் Random Order-ல் படித்தோமானால், சுமார் 60 சதவீதம் படித்த திருப்தி இருக்கும். குறைந்த நேரத்தில் தொடர்புடைய கருத்துக்களை சுமார் 2 மணி நேரத்தில் படித்துவிடுவீர்கள்.

இவையனைத்தும் தொழில் நுட்ப, மற்று கல்வி சம்பந்தப்பட்ட புத்தகங்களுக்கு பொருந்தும்.

கதைகளை எப்படி படிப்பேன் என்று அடுத்த பதிப்பில் எழுதுகிறன்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி