மீண்டும் ஞானி - 3. பரிணாம வளர்ச்சி

மீண்டும் ஞானி 3பரிணாம வளர்ச்சி

சொன்ன மாதிரி 14ம் தேதி பள்ளிக்கு வந்து சேர்ந்தான். அவன் தலைமை ஆசிரியருடம் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் பிள்ளைகளுக்கு ஒரு வார்த்தை கூறினேன்.

அன்புள்ள மாணவர்களுக்கு வணக்கம். நான் என்னுடைய நண்பர் ஞானியை அழைத்து வந்திருக்கிறேன். அவர் பேசும் விதத்தை தப்பாக எடுத்துக் கொள்ளாமல் அவரிடமிருந்து ஞானத்தை மட்டும் கிரஹித்துக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.

ஞானி அரங்கத்தில் நுழைந்தான். அனைவரும் எழுந்து அவனுக்கு வணக்கம் சொல்லி அமர்ந்தார்கள். அவனும் வணக்கம் சொல்லி அமர்ந்தான்.

பிள்ளைகளில் தலைவன் எழுந்து எங்கள் அழைப்பை ஏற்று வந்திருக்கும் உங்கள் இருவருக்கும் எங்கள் நன்றிகள். இப்போது என்னுடம் பயிலும் மாணவர்கள் கேள்விகள் கேட்பார்கள். உங்களுடைய மேலான பதில்களை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி அமர்ந்தான்.

ஒரு மாணவன் எழுந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, ஐயா, மனிதன் குரங்கிலிருந்து வந்தவன் என்பதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா என்று கேட்டான்.

அவன் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் அப்படித் தோன்றலாம். ஆனால் மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை. மற்ற உயிரினங்கள் போல தோன்றியவன் தான் மனிதனும்.

அப்படியென்றால் டார்வின் கூற்று தவறா. 

சார்ல்ஸ் டார்வின் ஒரு முட்டாள். அவனுடயை கூற்றும் பிதற்றல் தான். 

என்ன சொல்கிறீர்கள். 

ஆம். மேலை நாடுகள் எழுதும் விஞ்ஞான கூற்றையும் வரலாறையும் படித்து பித்துக்களாக அலைகிறீர்கள். சற்றே உங்கள் அறிவையும் பயன்படுத்துங்கள்.

ஐயா நீங்கள் கூறுவது விளங்கவில்லை என்றான் அந்த மாணவன் பவ்யமாக.

தம்பி, நீ கற்றவையெல்லாம் மற்றவை. நீ பயன்படுத்தும் பொருட்கள் எல்லாம் வெளிநாட்டு கண்டுபிடிப்புகள். இப்படி எல்லாவற்றிற்கும் வெளிநாட்டையே நம்பி இருக்கும் நீ, ஞானத்திற்கும் வெளிநாட்டை நாடுவது வருந்தத்தக்கது என்றான் ஞானி. அவன் இவ்வளவு அழகாக பேசியது எனக்கே பிடித்திருந்தது. 

அனைத்து உயிரினங்களும் ஒரு சேர உலகில் வந்தன. சில உயிரினங்கள் தங்கியது. சில உயிரினங்கள் தங்கவில்லை. இன்னும் கூட முட்டையிலிருந்து கோழி வந்ததா, கோழியிலிருந்து முட்டை வந்ததா எனும் முட்டாள்தனமான கேள்விக்கே பதில் தேடிக் கொண்டிருக்கிறது விஞ்ஞானம்.

ஒரு ஆதாம் ஏவாளால் தான் இந்த மக்கட் பெருங்கடல் உருவானது என்றால் ஏன் கறுப்பு, மஞ்சள், வெள்ளை, மாநிற மக்கள் இருக்க வேண்டும். நீங்கள் படித்த டி என் ஏ மரபணு கூற்று என்னவாகும். இதிலிருந்தே தெரியவில்லையா, உலகில் பல இடங்களில் ஒரு சமயத்தில் பல்வேறு பகுதிகளில் மனிதனும் மற்ற உயிரினங்களும் தோன்றின. அதிலிருந்தே சந்ததிகள் வளர்ந்தன. 

அறிவுக்கு அயல்நாட்டிற்கு போகாதே. உன் சான்றோர் எழுதியதையும் படி. 

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி