மீண்டும் ஞானி -4. ஞானி என்ன வாதி

மீண்டும் ஞானி 4ஞானி என்ன வாதி

இன்னொரு மாணவன் எழுந்து கேட்டான்.

நீங்கள் ஆத்திகவாதியா நாத்திகவாதியா.

ஆத்திகம் என்றால் என்ன என்று அந்த மாணவனையே திருப்பி கேட்டான் ஞானி.

ஆத்திகம் என்றால் கடவுளை நம்புவது என்று சொன்னான் அந்த மாணவன்.

இல்லை கடவுளை நம்புவதாக சொல்வது ஆத்திகம். நாத்திகம் என்றால் என்ன.

நாத்திகம் என்பது கடவுளை மறுப்பது.

மீண்டும் இல்லை. நாத்திகம் என்பது கடவுள் இருக்கிறார் என்பவர்களை எதிர்ப்பது. நான் ஆத்திகமும் இல்லை நாத்திகமும் இல்லை. நான் ஞானி. ஆத்திகம், நாத்திகம் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதற்கு மேலும் விருப்பு வெறுப்பு இல்லாத, கொலை, கற்பழிப்பு, கொள்ளை, பொய், புரட்டு இல்லாத உலகம் என்னுடயைது. என் உலகுக்கு வாருங்கள் என்றான் ஞானி.

ஏன் நீங்கள் நாத்திகம் ஆத்திகம் இரண்டும் தவறு என்று கூறுகிறீர்கள். 

ஆத்திகம் என்பது புரியாத கடவுள் எனும் ஒரு விஷயத்தை சுற்றி பொய்யான பழக்கவழக்கங்களையும் கலாச்சாரத்தையும் வளர்த்து மனிதர்களை மூடராக்கும் ஒரு விஷயம். இந்த புரியாத விஷயங்களை வைத்து மந்திரம், தந்திரம், சடங்கு, சாங்கியம், வாஸ்து, ஜோசியம், பரிகாரம் என்று இடுக்குகளை வைத்து பணம் பார்க்கும் சில பேர். இவர்கள் கடவுளை நம்புவதாக சொல்லி கோவில்களை இடிப்பவர்கள்.
நாத்திகம் என்பது கடவுளை நம்புவர்களை எதிர்த்து, பகுத்தறிவாதம் என்று சொல்லி, மத நூல்களை கொளுத்தி, கடவுள் சிலைகளை கொளுத்தி மற்றவர்கள் காலில் விழக்கூடாது என்று சொல்லி தன் காலில் மக்களை விழ வைக்கும் கூட்டம். இவர்களும் கோவில்களை இடிப்பவர்கள். 

இந்த இருவரில் நீ எந்த கூட்டத்தை சேர்ந்த நிற்ப்பாய்? இரண்டு முட்டாள்களுக்கும் இடையில் நீ நின்றால் உன்னை காப்பாற்றுவேன். ஆனால் நீ இரண்டு முட்டாள்களாக்கும் கூட்டதில் நிற்கிறாய். நான் என்ன செய்வது?

இந்த மடத்தனத்திலிருந்து வெளியே வா. மனிதத்துவம் என்று உள்ளது. அது என்ன என்று கண்டுக் கொள். பிறகு இந்த இரண்டு கூட்டங்களையும் ஓட ஓட விரட்டு. 

அப்படியென்றால் நாங்கள ஞானியாவது எப்போது என்று கேட்டான் அந்த மாணவன்.

முதலில் மனிதானாக மாறுங்கள். பிறகு ஞானியாவதை பற்றி பேசலாம். 

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி