மீண்டும் ஞானி - 9. ஆசிரியர்

மீண்டும் ஞானி - 9. ஆசிரியர்

மாணவர்கள் மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தனர். நிறைய விஷயங்களை நானும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்து. 

15 நிமிடங்கள் இடைவெளி கொடுத்தனர். நானும் ஞானியும் வெளியே தேனீர் எடுத்துக் கொண்டு வந்து நின்றோம். அப்போது ஒரு ஆசிரியர் வெளியே வந்தார். 

அரங்கத்தின் அருகில் இருந்த இடைவெளியி்ல் வந்து நின்று ஒரு சுருட்டை எடுத்து புகைத்தார். ஞானியை பார்த்து ஒரு நட்பு புன்னகை வீசிவிட்டு புகைப்பெட்டியை நீட்டி, சிகரெட் என்றார்.

நீ ஆசிரியன் தானே என்றான் ஞானி காட்டமாக.

ஆம். 

நீயே பள்ளி வளாகத்தி்ல் புகைப்பிடித்தால் மற்றவர்களுக்கு என்ன கற்றுத் தருவாய்.

அந்த ஆசிரியர் அதிர்ந்து போனார். இதை சற்றும் எதிர்பார்க்கவி்ல்லை. 

மாணவர்கள் என்னை பார்த்தா புகைப்பிடிக்க கற்றுக் கொள்கிறார்கள். பள்ளியை விட்டு வெளியே போன பிறகு பல பேர்களை சந்திக்கிறார்கள். அங்கிருந்து புகைபிடிக்க கற்றுக் கொண்டால் அதற்கும் நான் தான் காரணமா என்றார் தன் மீதுள்ள குற்ற கறையை அகற்றுபவர் போல்.

குழந்தை வளரும் போது தன் தந்தையை முன்னோடியாக பார்க்கிறான். பிறகு தனது ஆசிரியனை முன்னோடியாக பார்க்கிறான். கல்லூரி முடியும் வரையில் அவன் யாராவது ஒரு ஆசிரியரையோ பேராசிரியரையோ வாழ்கையின் மைல்கல் போல் பாவிக்கிறான். தந்தையிடமும் ஆசிரியரிடும் இருக்கும் பழக்கங்கள் நல்லவையா கெட்டவையா என்பதை தெரிந்துக் கொள்ளும் பக்குவம் வரும் முன்பே அந்த பழக்கங்கள் அவனுக்கு பிடித்து விடுகின்றன்.

நீயும் இவர்கள் ஆசான். நீ வீட்டிலும் ஒரு தந்தை. ஆசிரியர் அனைவரும் பாடம் கற்பிப்பவர் அல்லர்.

போ, முதலில் பாடம் கற்பிக்கும் அளவுக்கு உனக்கு தகுதிகள் இருக்கிறதா என்று யோசி. தவறுகளுக்கு சப்பை கட்டும் பழக்கத்தை விடுத்து ஒரு சமுதாயத்திற்கே முன்னோடியாக இருக்கும் தகுதி உன்னிடத்தில் இருக்கிறதா என்று பார். பிறகு வா என்னிடம்.

நான் அதிர்ந்து நின்றேன். அந்த ஆசிரியரின் உடல் நடுங்குவதை பார்த்தேன். அவர் உடல் முழுக்க வியர்த்திருந்தது. 

அரங்கத்திலிருந்து மீண்டும் அழைப்பு வந்ததால் நானும் ஞானியும் உள்ளே நுழைந்தோம்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்