மீண்டும் ஞானி -6. மதமாற்றம்

மீண்டும் ஞானி -6மதமாற்றம்

இன்னொரு பிள்ளை எழுந்து நின்று, ஐயா, மதமாற்றம் சரியானதா என்று கேட்டான். போட்டு தாக்குங்கடா பசங்களா என்று குஷியாகிவிட்டேன் நான்.

மதமே கூடாது என்று கூறுகிறேன் நான் என்றான் ஞானி.

அது சரி ஐயா. இன்றைய நிலையில் மதங்கள் இருக்கின்றனவே. ஆக இன்றைய சூழ்நிலையில் உங்கள் கருத்து என்ன.

மதமாற்றம் மனிதனின் பாதுகாப்பற்ற Insecurity, பயந்த நிலையையே காட்டுகிறது. மனிதன் தான் தனியாக இருக்க விரும்பாமல் தன் கூட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளவே இந்த முயற்சி. ஆனால் நான் முன்பு கூறியது போல மனிதனால் கூட்டமாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க முடியாது.

முதலில் உலகில் இருக்கும் மதங்களை பாருங்கள். எல்லா மதங்களிலும் ஆயிரமாயிரம் பிரிவுகள். தனி கோவில்கள், தனி கூட்டங்கள், தனி சின்னங்கள், குறியீடுகள், வழிபாட்டு முறைகள். இவை மதங்களில் இருக்கும் வேறுபாடுகள் அல்ல. ஒரு மதத்தினுள் இருக்கும் வேறுபாடுகள். முதலில் ஒவ்வொரு மதங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகள் மறந்து ஒரு கிளையாக மாறி நிற்கட்டும். பிறகு மற்ற மதங்கள் தவறு என்றும் தம் மதம் சரியென்றும் மற்ற மதத்தினரை தம் மதத்தில் சேருமாறும் அழைக்கட்டும். 

உனக்கு பிற மதத்தின் கோட்பாடுகள் நன்றாக இருந்தால் அவற்றை உன் மதத்தில் இருந்துக்கொண்டே பின்பற்றலாம். அதற்கு அந்த மதத்திற்கு மாறவேண்டும் எனும் அவசியம் இல்லை. மேலும் உலகில் அனைத்து மதங்களிலும் நல்ல கோட்பாடுகள் உள்ளன. நீ உன் மதத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை பின் பற்றுகிறாயா முதலில்?

மதம் மாற்றம் என்பது ஒரு கடவுளின் மீது நம்பிக்கை போய் இன்னொரு கடவுள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் ஏற்படுகிறது. அப்படியென்றால் நீ மாறும் மதத்தை கடைபிடிப்பவர் அனைவரும் கஷ்டமே இல்லாமல் சுகமாக இருக்கிறார்களா?

சிலர் காசுக்காக மாறுகிறார்கள். அவர்களைப்பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லை. மதத்தை வியாபாரமாக்கும் வியாபாரிகள்.

சிலர் மன நிம்மதிக்காக மாறுகிறார்கள். அவர்களை என்னவென்று சொல்ல.

சிலருடைய மதத்தில், ஒருவனை உன் மதத்திற்கு மாற்றினால் உனக்கு சொர்க்கம் என்று கூறுகிறார்கள். அதாவது இது போல ஒருவர் சொர்க்கத்திற்கு சென்று இவரிடம் வந்து கூறுகிறார், ஐயா, நான் ஒருவரை என் மதத்திற்கு மாற்றியதால் நான் சொர்க்த்தில் இருக்கிறேன், நீயும் அப்படி செய்தால் சொர்க்கத்திற்கு வருவாய் என்று. வெறும் பிதற்றல் இல்லையா?

ஒரு மதத்தில் பிறப்பது நீ கேட்டு வருவதல்ல. எப்படி ஒரு தாயிடம் பிறக்க வேண்டும் என்று நீ கேட்பதில்லையோ அது போலதான். ஆக ஒரு தாயிடம் பிறந்த பிறகு, எனக்கு இந்த தாய் வேண்டாம், வேறு தாயிடம் செல்கிறேன் என்று சொல்வாயா. 

மதம் என்பது தாய் போல. பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ அதை மாற்றாதே. மற்ற மதத்தை தூற்றாதே. அவைகளையும் போற்று. 

மதம் எனும் மதம் பிடித்து அலையாதே.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி