ஞானி பாகம் 3 - 2. சோம்பேறித்தனம்

ஞானி பாகம் 3 - 2. சோம்பேறித்தனம்

கணினி பெட்டி பழுதாகிவிட்டது. பிரித்துப்போட்டு உள்ளே தலையை விட்டு நோண்டிக் கொண்டிருந்தேன். ஞானி மின்னல் போல் உள்ளே நுழைந்தான்.

வா ஞானி. நலமா?

நலத்துக்கு குறைவில்லை. என்ன செய்கிறாய்?

அதுவா கம்ப்யூட்டர்ல பிரச்சனை. சரி பார்க்கிறேன்.

உனக்கு கம்ப்யூட்டர் சரி பார்க்க தெரியுமா?

தெரியாது. சும்மா முயற்சி தான்.

தெரியாத வேலையை ஏன் செய்கிறாய்?

பின்னே இன்ஜினியரை கூப்பிட்டா 500 ரூபாய் கேட்கறான்.

கொடுத்துட்டு போயேன். அவன் பிழைப்பில் ஏன் மண் அள்ளி போடுகிறாய்? ஒவ்வொரு நுட்பமான வேலையை செய்ய விஷயம் தெரிந்தவர் இருக்கிறார்கள். உன் வேலையை இன்னொருவர் செய்தால் ஒப்புக் கொள்வாயா?

என்ன ஞானி. நம்ம வேலையை நாமே செய்யறது தப்பா?

சோபாவில் காலை நீட்டி அமர்ந்துக் கொண்டு தூரத்திலிருந்து தொலைகாட்சி பெட்டியை சுலபமாக பயன்படுத்த சோம்பேறித்தனைத்தை அதிகரிக்கும் ஒரு பொருள் - ரிமோட், அதை கூட உன் மனைவியிடம் எடுத்து தர சொல்கிறாயே - அதை நீயே செய்யலாம்.

6 முட்டை வாங்க வேண்டும் என்றாலும் எதிர் கடைக்கு போன் போட்டு கடைக்காரரை எடுத்து வர சொல்கிறாயே - அதை நீயே செய்யலாம்.

ஞாயிறு மதியம் பின் தெருவில் இருக்கும் ஓட்டலுக்கு போன் போட்டு சாப்பாட்டை வீட்டிற்கு கொண்டு வரச் சொல்கிறாயே - அதை நீயே செய்யலாம்.

கேவலம் தண்ணி குடிக்க கூட உன் மகனுக்கு குரல் கொடுக்கிறாயே அதையாவது நீயே செய்யலாம்.

இதையெல்லாம் நீயே செய்யாமல் உனக்கு தெரியாத விஷயத்தில் மூக்கை நுழைக்கிறாய் நீ? 

அப்பாடா. மழை ஓய்ந்த மாதிரி இருந்தது. சரி ஞானியோட பஞ்ச் டயலாக் முடிந்துவிட்டது. மின்னல் வேகத்தில் மறைந்துவிடுவான் என்று பார்த்தால் அமைதியாக உட்கார்ந்திருந்தான்.

என்ன என்பது போல் பார்த்தேன். இன்னும் பாட்டு முடியவில்லையா என்று நினைத்துக் கொண்டேன்.

காபி என்றான்.

ஓ சாரி ஞானி. மறந்தே போயிட்டேன். அம்மா ஞானிக்கு ஒரு காபி கொண்டுவா என்று அடுப்பறை நோக்கி என் மனைவிக்கு குரல் கொடுத்தேன்.

எரித்துவிடும் பார்வையில் என்னை பார்த்தான்.

சரி சரி. நானே போய் காபி போட்டு கொண்டு வரேன் என்று சொல்லி எழுந்தேன்.

விரைவாக விஷயம் கற்பவர் இருக்கும் இடத்தில் ஞானிக்கு இடம் இல்லை என்று சிரித்தபடியே நழுவினான்.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி