மீண்டும் ஞானி - 11. பழையது எது

மீண்டும் ஞானி - 11. பழையது எது

ஒரு மாணவன் எழுந்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கு சரியான விளக்கம் என்னஎன்று கேட்டான். 

ஞானி உடனே பதில் சொல்லாமல் ஒரு நிமிடம் மௌனமானான். 
பிறகு மெதுவாக எனக்கு தெரியாது என்றான்.

என்ன ஞானிக்கே தெரியாதா என்று ஆச்சர்யப்பட்டேன். பிறகு குதூகலம் அடைந்தேன். அப்பாடா ஞானிக்கும் தெரியாது விஷயங்கள் இருக்கிறது என்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். ஆனால் என்னுடைய சந்தோஷம் சில நிமிடங்கள் தான் நீடித்தது.

மாணவன் என்ன என்று கேட்டான், என்னுடைய அதே ஆச்சர்யத்துடன்.

ஆம். மனிதன் எதை புரிந்துக் கொண்டான் என்று எனக்கு தெரியாது. பழையன வற்றை எதிர்ப்பதும் பழையன தொடர்ந்தால் அவர்கள் முட்டாள்கள் என்றும் மனிதன் நினைக்கிறான்.

வீட்டில் நகம் வெட்டினால் தரித்தரம் ஏற்படும் என்று முன்னோர்கள் சொன்னார்கள். அதை மூடநம்பிக்கை என்கிறார்கள் பகுத்தறிவு வியாதிகள்.

ஆராயமால் பழைய பழக்கவழக்கங்களை முட்டாள்தனம் என்பது நம்முடைய அறிவின் சிறுமையை காட்டுகிறது. 

உன்னுடயை வயதில் நகக் கண்களின் நடுவில் உள்ள அழுக்கு உன் வயிற்றுக் சென்று உபாதைகள் ஏற்படுத்தலாம் என்று சொன்னால் உனக்கு புரியுமா. அதனால் தான் பெரியவர்கள் அப்படி சொன்னார்கள். மேலும் வீட்டில் நகம் வெட்டினால் கண்ட இடங்களில் விழுந்து உணவு பதார்த்தங்களுடன் கலந்துவிடும் என்பதால். 

6 மணிக்கு மேல் பெண்கள் தலைவாரினால் லட்சுமி வீட்டுக்கு வரமாட்டாள் என்பார்கள். அதற்கு அது தான் அர்த்தமா. 6 மணிக்கு மேல் தலைவாரினால் மயிற்கால்கள் கண்ட இடங்களில் விழும். அதனால் சுகாதாரம் கெடும். பகலிலேயே கண்ணுக்கு படாத முடிகள் இரவில் கிடைக்குமா?

இது போலவே பூனை குறுக்கவருவதற்கும் மூன்று பேராக சென்றால் காரியம் நடக்காதென்பதற்கும் வடக்கு பக்கம் தலைவைத்து படுத்தால் யமனிடம் செல்வீர்கள் என்பதற்கும் ஏதாவது காரண காரியங்கள் இருக்கும். அதை உன் அறிவு கொண்டு ஆராய்ந்து அவை சரி தவறு என்று சொன்னால் அதை ஏற்கலாம். அதைப்பற்றி விவாதிக்கலாம்.

அதைவிடுத்து பழையன எதுவாக இருந்தாலும் எதிர்ப்பது என்பது வேடிக்கையாக இருக்கிறது. காரண காரியங்கள் இல்லாமல் ஒரு பழக்கம் பல்லாயிரம் ஆண்டுகளா வர இயலுமா. அதை நீ யோசிக்க வேண்டாமா.

பழைய பழக்க வழக்கங்களை எதேச்சையாக மூட நம்பிக்கை என்று சொல்வது நீ உன் தந்தை முட்டாள், தாத்தா முட்டாள் கொள்ளு தாத்தா முட்டாள் என்று சொல்வது போல் உள்ளது. நீ முட்டாள்களின் பரம்பரையில் வந்தவன் என்பது சொல்லிக் கொள்ள உனக்கு பெருமையாக இருந்தால் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. 

பகுத்தறிவாதி என்று சொல்லிக் கொண்டு நேற்றைய மனிதன் செய்ததை இன்றைய மனிதன் எதிர்த்தான் என்றால் நாளைய மனிதன் இன்றைய மனிதன் செய்வதை மூடநம்பிக்கை என்றும் முட்டாள்தனம் என்றும் சொல்வான். ஏற்பாயா நீ?

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி