ஞானி பாகம் 1-கதைகள் 1-12 முடிவுற்றது பின் குறிப்பு

எழுதிய வருடம் 1990, பள்ளிப்பருவத்தில்..

கதையை படித்து தலையை பிய்த்துக்கொள்ளாமல் இருக்க, கதையின் நோக்கமும் கருத்தும்..

1. மனிதன்மனிதர்கள் ஞானி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் ஞானம் உருவத்தால் வருவதல்ல என்பதை வலியுறுத்தியிருக்கிறேன்.


2. வெற்றிசிறிய வெற்றிகள் நிரந்தரம் அல்ல. வெற்றி தோல்விகளாக மாறுவதும் தோல்வி வெற்றிகளாக மாறுவதும் நிமிடத்துக்குள் நடக்கக்கூடியவை. நிரந்தரமற்றவைக்காக களியாட்டம் கூடாது.


3. கல்நாம் பலவிஷயங்களை தடையாக நினைக்கிறோம். ஆனால் இவையெல்லாம் நம் மனதுள் ஏற்பட்ட கருத்துக்கள். நிஜமான தடை நமக்கு நாமேதான்.


4. கண்அன்பை பகிர்ந்தளிக்க தெரியாமல் over commitment செய்துக் கொண்டு தவிக்கிறோம். இதைப்பற்றி இந்த பகுதி.


5. பயணம்சிறு அசைவுகள் நம் வாழ்வில் என்ன மாற்றம் ஏற்படுத்தும். நிச்சயம் அநிச்சயம் எது என்பதே இறப்பிற்கும் இருப்பிற்கும் உள்ள வித்தியாசம்.


6. மனம்இல்லாத ஒன்றை கண்டு நடுங்கும் மனித குணத்தை தூற்றியிருக்கிறேன். விதி, மனம் எல்லாம் மாயை என்பதை காட்டும் கதை இது.


7. உறக்கம்விழிப்பிலும் தூக்கத்திலும் நாம் காணும் கனவுகள் எத்தனை பாதிப்பை ஏற்படுத்தலாம். விழிப்புடன் இருக்க வேண்டும் சலனம் இன்றி இருக்க வேண்டும் என்பதே இங்கே கருத்து.


8. சந்தேகம்தன் சந்தேகத்தை தீர்க்க ஞானியை நாடிச் செல்கிறான் மனிதன். அவனே முடியாது என்றாலும் விடுவதில்லை. இப்படி நம்முடைய குருட்டு நம்பிக்கையை தகர்க்கிறான் ஞானி.


9. சாதிசாதி என்ற மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சமூக கேட்டை தூற்றுகிறான் ஞானி.


10. அழுகுகண்ணால் காணும் அழுகு, கண்கள் சொல்லும் அழகு நிரந்தமற்றது என்பதே கருத்து.


11. மீண்டும் சந்திப்புநோக்கமில்லா வாழ்கையை ஏசுகிறான் ஞானி. பணம் சம்பாதிப்பது மட்டுமே ஒருவனின் நோக்கமாக இருக்கக்கூடாது என்பது அவன் கருத்து.


12. மாற்றம்புரியாத இவ்வாழ்வில் இயந்திரம் போல சுழலுகிறோம். சற்றே நின்று யோசித்தால் நாம் எதற்காக இதையெல்லாம் செய்தோம் என்பது நமக்கே விளங்காது. இது தான் கருத்து.

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி