தொடர்கதை: இன்னும் பெயர் வைக்கவில்லை - 10

10

அந்த புது சுவாமிஜி ஆங்கிலத்திலும் தமிழிலும் தத்துவங்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தார். பலரும் அவர் பேசுவதை உன்னிப்புடன் கவனித்தாலும் வியப்பாகவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அந்த புது சுவாமிஜி வேறு யாரும் இல்லை நான் தான். என்னை அழைத்துக் கொண்டு வந்த பெரியவர் என்னை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டிருந்தார். சும்மா இல்லாமல் பல புத்தகங்களையும் என் அறைக்குள் வைத்துச் சென்றிருந்தார். நானும் புது அவதாரத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தேன்.

நீரில் குதித்து எத்தனை நாட்களுக்கு பிறகு எனக்கு விழிப்பு வந்ததென்றே தெரியாது. ஏதோ நாட்டு வைத்தியம் செய்திருந்தார்கள் எனக்கு.

பல நாட்களுக்கு பிறகு என்னை இரண்டு பேர் பார்க்க வந்திருந்தார்கள்.

வணக்கும் சுவாமிஜி நாங்க இரண்டு பேரும் தமிழ் நாட்டிலேர்ந்து வந்திருக்கோம். எங்க ஊரில் ஒரு ஆன்மீக விழிப்புணர்வு பேரவை நடத்தறோம். அதுல தமிழ் தெரிஞ்ச உங்களை மாதிரி மஹான் வந்து பேசனா நல்லா இருக்கும்னு நினைக்கறோம். நாங்களே உங்களுக்கு போற வர செலவு எல்லாம் செஞ்சி அழைச்சிகிட்டு போறோம். சம்மதமா?”

அவர் என்னை மஹான் என்று அழைத்தது எனக்கே விநோதமாக இருந்தது, சரியென்று ஒப்புக் கொண்டேன். அவர்கள் இருவரும் என்னை அழைத்து வந்த பெரியவரிடம் சிறிது நேரம் பேசிவிட்டு புறப்பட எத்தனித்தார்கள். அந்த பெரியவர் என் கையில் சிறிய விபுதி பொட்டலதை கொடுத்தார். என்னை ஆழமாக பார்த்தார்.

உனக்கு ஏதாவது பிரச்சனையின்னா மறுபடியும் என்னை வந்து பாரு. இங்கே எத்தனை நாள் வேணும்னாலும் நீ தங்கலாம்என்றார்.


எனக்கு அவர் சொன்னது விளங்கவில்லை. இருந்தாலும் நன்றாக இருந்தது. நானே முற்றும் துறந்தவன் எனக்கு என்ன பிரச்சனை வரப்போகிறது. ஏதோ லெக்சர் செய்ய அழைக்கிறார்கள். திரும்பவும் கொண்டு வந்து விடப்போகிறார்கள் அதெற்கு ஏதற்கு இந்த பெரியவர் இவ்வளவு பீடிகையுடன் பேசுகிறார் என்று நினைத்தபடியே புறப்பட்டேன். 

Comments

Popular posts from this blog

ஞானி பாகம் 5 - 3 தானம்

ஞானி பாகம் 5 - 1 தினசரி